வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

13 May, 2019 | 03:36 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு - வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வீதியை புனரமைத்து தருமாறு கோரிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கும், வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுகின்றமைக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரதேசவாசியொருவர் கருத்து தெரிவிக்கையில், 

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிய இளைஞரை கைது செய்துள்ளனர். ஆனால் வெடி குண்டு உற்பத்தி செய்யும் பாரிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டார்கள் எனக் கூறி இன்று அதிகாலை சிலரை கைது செய்து கூட்டிச் சென்றுள்ளார்கள். ஆனால் நாடளாவிய ரீதியிலுள்ள பல முஸ்லிம் பள்ளவாசல்களில் வாள்களும், கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன. அதனுடன் தொடர்புடையவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை?

இந்த வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை உடைக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்னன. இது தொடர்பில் இந்த பொலிஸ் பிரிவிற்கான பொறுப்பதிகாரி எதுவும் தெரியாது எனத் தெரிவிக்கின்றார்.

எனவே இந்த பொறுப்பதிகாரி இங்கு தொடர்ந்தும் இருந்தால் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. இன்னும் சோதனை செய்யப்பட வேண்டிய இடங்கள் பல காணப்படுகின்றன. அவை குறித்து தகவல் வழங்கியும் சோதனை மேற்கொள்ளப்படவில்லை. சோதனை செய்ததாக எம்மிடம் வந்து பொய் கூறுகின்றனர். 

எனவே ஜனாதிபதியும் பாதுகாப்பு துறையும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட வேண்டும். காரணம் இவர்கள் அரசியல்வாதிகளுக்கு சார்பாகவே வேலை செய்கின்றனர். எனவே தான் இவரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 

ஜனாதிபதி செயலாளர் அல்லது ஏனைய அதிகாரிகள் இங்கு வருகை தந்து நிலைமை தொடர்பாக ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு வீதி அபிவிருத்தி செய்து தரப்பட வேண்டும் எனக் கோரியதற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படும் வரை நாம் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31