தோல்விக்கு காரணம் இதுதான்!

Published By: Vishnu

13 May, 2019 | 02:27 PM
image

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் மலிங்கவின் சிறப்பான பந்து வீச்சினால் மும்பை அணி ஒரு ஓட்டத்தில் வெற்றிபெற்று சம்பயினானது.

இந் நிலையில் இப் போட்டியின் பின்னர் மும்பை அணியுடனான தோல்வியன் காரணம் என என பரிசளிப்பு விழாவின்போது தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தோனி, 

ஒரு அணியாக இந்த தொடர் சென்னைக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் நாங்கள் கடந்த ஆண்டுகளைப் போல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வரவில்லை. 

இப் போட்டியை பொறுத்தவரையில் இரண்டு அணிகளும் நிறைய தவறுகளை இழைத்துள்ளோம். ஆனால் எங்களை விட மும்பை அணி குறைவான தவறுகளை செய்ததால் வெற்றி பெற்றார்கள். 

எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்த மைதானத்தில் 150 ரன்கள் என்பது கண்டிப்பாக எட்டக்கூடிய இலக்கு தான். இதுபோன்ற குறைவான இலக்கில் இறுதிப்போட்டியில் எதிரணியை சுருட்டுவது என்பது கடினம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அதனை சிறப்பாக செய்தனர். 

எனினும் ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்தது வேதனையளிக்கிறது. போட்டியின் தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்கள் தான் காரணம் என்பதால் அடுத்த தொடரில் நிச்சயம் அவர்கள் ஓட்டங்களை குவிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46