21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்தே திட்டம் வகுத்துள்ளனர் 

Published By: Vishnu

12 May, 2019 | 07:55 PM
image

(ஆர்.யசி )

21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே  அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில்  எட்டுப்பேர் தம்மை தற்கொலை தரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் எனவும்  இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார். 

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தகவல் கிடைத்தது. ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பா என்பதில் எமக்கு கேள்வி இருந்தது. சில இறுக்கமாக கொள்கைகளுடன் அவர்கள் செயற்படுவது மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதேபோல்  பாதுகாப்பு சபையில் இந்த விடயம் குறித்து 13 தடவைகள் பேசப்பட்டதாக என்ற எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்.

ஆனால் ஆழமாக எந்த விடயங்களும் பேசப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட சகல தரப்பினரதும் பலவீனம் காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் யார்  குற்றவாளி என்பதை என்னால் கூற முடியாது. நான் உட்பட  பாதுகாப்புபடை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் இதில் குற்றவாளிகள் தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன்.  

21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றும் எமக்கு 24 ஆம் திகதி தான் இவற்றை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. எமது புலனாய்வு தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது. சிறந்த சில புலனாய்வு அதிகரிகள் கைதுசெய்யப்பட்டமை புலனாய்வு செயற்பாடுகள் குறைக்கப்பட்டமை என்பன சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல் இராணுவமாக 

எம்மால் சுயாதீனமாக செயற்பட அதிகாரம் இல்லாமையே இதற்கு காரணம். எனினும் 24 ஆம் திகதியில் இருந்து இருவரை இராணுவத்தின் செயற்பாட்டால் தான் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்துள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53