போர்க்­குற்­றங்­களில் பெண்களின் பாதிப்பை சாதா­ரண விட­ய­மாக பார்ப்பது தவ­று

Published By: MD.Lucias

26 Apr, 2016 | 09:02 AM
image

 போர்க்­குற்றம் போன்ற பாரிய விட­யங்களில் பெண்கள் பாதிக்­கப்­ப­டு­வதை சாதா­ரண விட­ய­மாக கரு­து­வது தவ­றா­ன­தென சுவீடன் வெளிவி­வ­கார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரொம் தெரி­வித்தார்.

அத்­துடன் வெளிநாட்­டுக் ­கொள்­கையில் பெண்­ணிய கோட்­பா­டு­களை உள்­வாங்­கு­வதால் எவ்­வி­த­மான மாறு­பட்ட நிலை­களும் ஏற்­ப­டப்­பே­ாவ­தில்­லை­யெ­னவும் குறிப்­பிட்­டவர் இலங்­கையில் மூன்று தசாப்த யுத்தம் நிறை­வுக்கு வந்து தற்­போது நிலை­யான சமா­தா­னத்­தையும் பாது­காப்­பையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான தருணம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

நேற்று  மாலை லக்ஷ்மன் கதிர்­காமர் சர்­வ­தேச உற­வுகள் மற்றும் மூலோ­பாய கற்­கைகள் நிலை­யத்தில் "வெளியு­ற­வுக் ­கொள்­கையில் பெண்­ணி­யத்தின் பங்கு" எனும் தலைப்பில் விசேட சொற்­பொ­ழி­வொன்றை ஆற்­றி­யி­ருந்தார். இதன்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இச்­சொற்­பொ­ழிவு நிகழ்வில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­க­ள­ ச­ம­ர­வீர, பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர, பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி, வெளிநாட்டு தூது­வர்கள், அதி­கா­ரிகள், உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

90 களில் இலங்­கையில் சிறிது காலம் பணி­யாற்­றி­யி­ருந்தேன். அதன் பின்னர் மீண்டும் இலங்­கைக்கு வருகை தரு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­த­மை­யை­யிட்டும் உங்கள் முன்­னி­லையில் உரை­யாற்றக் கிடைத்­த­மை­யை­யிட்டும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

உல­கத்தின் பல பாகங்­க­ளிலும் பாரிய மோதல்கள் நடை­பெ­று­கின்­றன. கடந்த வரு­டத்தில் மட்டும் உல­கத்தில் 40 பாரிய மோதல் சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. இது 1999ஆம் ஆண்­டுக்குப் பின்னர் ஆண்­டொன்றில் பதி­வா­கிய அதி­க­ள­வி­லான பாரிய மோதல் சம்­ப­வங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றது. சிரியா, உக்ரேன், ஏமன், மாலி, ஈராக் போன்­வற்றை குறிப்­பாக கூற­மு­டியும்.

மோதல்கள், பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம் போன்­ற­வற்றால் பல்­வேறு இழப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றன. கல்­வி­யின்மை, வறுமை என்­பன ஏற்­ப­டு­கின்­றன. இது மோதல்கள் இடம்­பெறும் பகு­தி­களில் வலு­வாக அதி­க­ரிக்­கின்­றது. சர்­வ­தேச சமூ­கத்தின் 2030 ஆம் ஆண்­டுக்­கான நிகழ்ச்சி நிரலில் சமா­தானம், பாது­காப்பு, வாழ்க்கை நிலை மாற்றம், அபி­வி­ருத்தி, ஆகி­ய­வற்றை கொண்­டுள்­ளது. இயற்கை அனர்த்தம், விவா­க­ரத்து ஆகி­ய­வற்றின் கார­ண­மாக 125 மில்லியன் மக்­களின் உயிர்ப்­பா­து­காப்­புக்­காக 25 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரு­ட­மொன்­றுக்கு செல­வி­டப்­ப­டு­கின்­றது. தற்­போது மனித அபி­வி­ருத்­திக்­காக 50 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை செல­வி­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

நீண்­ட­கால ஆயுத மோதல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்த நாடென்ற வகையில் பல்­வேறு துர்ப்­பாக்­கி­ய­மான வேறு­பட்ட வன்­முறை அனு­பவங்கள் உங்­க­ளுக்கு காணப்­ப­டலாம். வன்­மு­றை­க­ளற்ற நிலை­யான சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பு­­வ­தற்­கான சர்­வ­தேச சமூ­கத்தின் உத­விகள் தொடர்ந்தும் வழங்­கப்­படும். அதே­நேரம் நிலை­யான சமா­தா­னத்தை முறை­யான வகையில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான தொடர்ச்­சி­யான முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களை இலங்கை அர­சாங்கம் இடை­வி­டாது முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

வெற்­றி­க­ர­மான நிலை­யான சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டு­மாயின் பால்­நிலை சமத்­து­வம் முக்­கி­ய­மாக கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. மோதல்கள், வன்­மு­றைச் சம்­ப­வங்­களின் போது பெண்­களின் மனித உரி­மைகள் ஆண்­களை விடவும் அதி­க­மாக மறுக்­கப்­ப­டு­கின்­றன. சமா­தா­னத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பாட்டில் பெண்கள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­டமை தொடர்­பான வெகு­வாக கவனம் செலுத்­தப்­ப­டு­வதோ முறை­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வதோ இல்லை.

கொலோ­னியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடு­களில் நிலை­யான சமா­தானத்தை கட்­டி­யெ­ழுப்­புதல், வாழ்க்கை முறை முன்­னேற்றம் போன்ற செயற்­பா­டுகள் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது பெண்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ளவில் அமைந்­தி­ருந்­ததை உதா­ர­ண­மாக கொள்­ள­மு­டியும். சமா­த­ானத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் உள்­ளிட்ட அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் சம அளவில் பெண்­களின் பங்­கு­பற்­று­தலை உறுதி செய்­ய­வேண்டும். இலங்­கையில் பல பெண்கள் பால்­நிலை சமத்­துவம் உள்­ளிட்ட பல செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். சம­ாதானம், பாது­காப்பு ஆகி­ய­வற்றில் பெண்­க­ளுக்­கான பங்­க­ளிப்பு சம ­அ­ளவில் வழங்­கப்­ப­ட­வேண்டும். அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதி­யாக பெண்­க­ளுக்­கான உரிய அந்­தஸ்­துக்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

எமது நாட்­டைப் ­பொ­றுத்­த­வ­ரையில் பெண்­ணிய வெளிநாட்­டுக்­கொள்­கையே காணப்­ப­டு­கின்­றது. இதன்­ மூலம் சமா­தா­னத்தை பேணு­வ­தற்­கான செயற்­பா­டுகள், அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் போன்­ற­வற்றில் முக்­கி­ய­மா­ன­தொரு வகி­பா­கத்தை பெண்­களால் வகிக்க முடி­கின்­றது. வெளிநாட்­டுக் ­கொள்­கையில் பெண்­ணி­யத்தை உள்­வாங்­கு­வதை தவ­றாக கரு­தக்­கூ­டாது. அதன்­மூலம் நிலை­யான சமா­தானம், பாது­காப்பு என்­பன உட்­பட பல­வி­ட­யங்­களில் முன்­னேற்­றத்தை எட்­ட­மு­டியும்.

பால்­நிலை சமத்­துவம் என்­பது தனி­யா­ன­தொரு பிரச்­சி­னை­யல்ல. சமா­தானம், பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­டைய முக்­கி­ய­மா­ன­தொன்­றான பிரச்­சி­னை­யாகும். பெண்கள் வன்­முறை, அடக்­கு­முறை, திட்­ட­மிட்ட அடி­மைத்­தன நிலை­மைகள் தொடர்ந்தும் காணப்­ப­டு­கின்­றன.

வெளிநாட்­டுக்­கொள்­கையில் பெண்­ணியம் தொடர்­பாக பார்க்­கையில் உரி­மைகள், பிர­தி­நி­தித்­துவம், யதார்த்­த­மான பரி­சீ­லனை ஆகிய மூன்­று ­வி­ட­யங்கள் முக்­கி­ய­மா­கின்­றன. மிலே­னியம் அபி­வி­ருத்தித் திட்டம் பல பெண்­களை பாட­சாலை செல்­வ­தற்கு உத­வி­­யுள்­ளது.

1990ஆம் ஆண்­டி­லி­ருந்து 2010 ஆம் ஆண்­டு ­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் 585 சமா­தான உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன. அதில் 92 உடன்­ப­டிக்­கை­களில் பெண்­களின் பங்­க­ளிப்பு உள்­ளன. அது 4 சத­வீ­த­மா­க­வுள்­ளது. அதே­நேரம் சமா­தான பேச்­சுக்­களில் ஈடு­பட்ட பெண்­களின் அள­வைப்­பார்க்­கையில் 10 சத­வீ­த­மா­க­வுள்­ளது.

மனித உரி­மைகள், சட்டம் ஒழுங்கு, ஆகி­ய­வற்றில் பெண்­க­ளுக்­கான உரிய இடம் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வ­மா­னது அனைத்து விட­யங்­க­ளிலும் குறிப்­பாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் முதல் பாரா­ளு­மன்றம், பேச்­சு­வார்த்தை மேசைகள், சமா­தான பொறி­மு­றைகள் வரையில் முறை­யாக காணப்­ப­ட­வேண்டும். வளங்கள் பகி­ரப்­ப­டும்­போது பெண்­க­ளுக்­கான சமத்­துவம் அளிக்­கப்­ப­ட­வேண்டும். பல நாடு­களில் பெண்­ணி­யத்தை வெளிநாட்­டுக் ­கொள்­கையில் உள்­வாங்­குவது தவ­றான கண்­ணோட்­டத்தில் பார்க்­கப்­ப­டு­கின்­றது. சில நாடு­களில் அது சாத்­தி­ய­மா­ன­தா­குமா என்ற ஐயப்­பாடும் காணப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான எந்­த­வி­மான மனோ­நி­லைக்கும் செல்­ல­வேண்­டி­ய­தில்லை. வெளிநாட்­டுக் ­கொள்­கையில் பெண்­ணி­யத்தை உள்­வாங்­கு­வதன் ஊடாக உயர்ந்த சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தோடு சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தியில் சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப முடியும். போர்க்குற்றம் போன்ற பாரிய விடயங்

களில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்ப டுகின்றனர். ஆனால் அதன்போதான நிலைமைகளில் அச்சம்பவங்களைத் தவிர்க்க முடியாத தொன்றாக பார்ப்பது தவறா னது. பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமைகளிலிருந்து உறுதியான பாதுகாப்பு அளிக்கப்படுவது அவசியமாகின்றது. நிலையான சமாதானம், பாதுகாப்பை திறந்த மனத்துடன் கட்டியெழுப்புவதற்கு பால் நிலை சமத் துவம் பேணப்படுகின்றமை மிகவும் முக் கியமாதொன்றாகின்றது.

மூன்று தசாப்த யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போது நிலையான சமாதா னத்தை கட்டியெழுப்பவதற்கான தருணம்

ஏற்பட்டுள்ளது. ஆகவே பால்நிலை சமத்துவம், பெண்ணியம் போன்ற விடயங் களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இலங்கை பெண்கள் வலுவானவர்கள். அவர்களின் பங்களிப்பு, வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58