சிரிய தலை­நகர் டமஸ்­கஸின் தெற்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள ஷியா இனத்­த­வர்­களின் புனித ஸ்தல­மொன்­றுக்கு அண்­மையில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற கார் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 7 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செய்தி முகவர் நிலை­ய­மான சனா தெரி­விக்­கி­றது.

அல் திய­பியஹ் நக­ரி­லுள்ள சேயிடா ஸெய்னாப் புனித ஸ்தலத்­திற்கு அருகில் இடம்­பெற்ற இந்தத் தாக்­கு­தலில் குறைந்­தது 20 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இந்தத் தாக்­கு­தலில் 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரிவிக்கிறது.

எனினும் மேற்­படி தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் பொது­மக்கள் எத்­தனை பேர் என்­பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த பெப்­ர­வரி மாதம் மேற்­படி புனித ஸ்தலத்­துக்கு அண் மையில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 134 பேர் உயிரிழந்திருந்தனர்.