வட­மா­காண கைத்­தொ­ழிற்­சா­லைகள் மீள இயங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

Published By: Raam

26 Apr, 2016 | 08:56 AM
image

வட­மா­கா­ணத்­தி­லுள்ள கைத் தொழிற்­சா லை­களை மீள இயங்க வைப்­ப­தற்கு நட­ வ­டிக்கை எடுக்­கப்­படும்.அதற்­க­மைய முத லில் காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சாலை மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக வணி­கத்­துறை மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

மேலும் கைத்­தொ­ழிற்­சா­லைகள் அமைக்­கப்­படும் போது அங்­குள்ள பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகா­ணத்தில் ஆரம்ப காலத்தில் இயங்கி வந்த கைத்­தொ­ழிற்­சா­லை­களை மீள இயங்க வைப்­பது தொடர்­பான கூட்டம் யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் கைத்­தொ­ழில்­துறை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மையில் நேற்று நடை­பெற்­றது.

இக் கூட்டம் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்.

வடக்கில் குறிப்­பாக யாழ்ப்­பாணம், காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சாலையை மீள ஆரம்­பித்து வைப்­ப­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. மத்­திய அர­சாங்கம் வட­மா­காண அர­சாங்­கங்­களின் சுற்­றுச்­சூழல் தொடர்­பான அறிக்­கை­க­ளையும் சமூகம் மற்றும் சூழல் தொடர்­பான அறிக்­கை­க­ளையும் பெற்ற பின்­னரே நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளும். இதே­வேளை காங்­கே­சன்­துறை தொழிற்­சாலை ஆரம்­பிக்கும் போது சுண்­ணக்கல் அகழ்வு இடம்­பெ­ற­மாட்­டாது. மாறாக பொதி­யிடல் நட­வ­டிக்­கை­களே ஆர ம்­பிக்­கப்­படும்.



தொழிற்­சா­லை­க்­கான ஆர­ம்­ப­கட்ட வேலைகள் ஆரம்­பிப்­ப­தற்கு வடக்கை சேர்ந்த மக்கள் பிர­தி­நி­திகள், பொது மக்கள் ஆகி யோரின் ஆலோ­ச­னைகள் பெறப்­பட்ட பின்­னரே அமைச்­ச­ரவை அனு­ம­திக்கு பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­படும். இங்கு தொழிற்­சாலை ஆரம்­பிக்கும் போது அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்டு அடுத்­த­தாக அடுத்த கட்ட பிர­தேசம் என படிப்­ப­டி­யா­கவே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மேலும் இத்திட்­டங் கள் மேற்­கொள்­ளப்­ப­டும்­போது முத­லீட்­டிற்­கான வாய்ப்­புக்கள் அதி­ரிக்கும். இதற்கும் வட­மா­கா­ணத்தை சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப டும்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் ஆரம்ப காலத்தில் இயங்கி வந்த தொழிற்­சா­லைகள் மீள இயங்க வைக்­கப்­ப­டும்­போது தொழிற்­சாலை எங்கு இயங்­கு­கின்­றதோ அப் பகு­தியை சேர்ந்த இளைஞர் யுவ­தி­க­ளுக்கே வேலை வாய்ப்­பிற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சாலை ஆரம்­பத்தில் இயங்­கி­யி­ருந்­த­வேளை சுண்­ணக்கல் அகழ்­வு­களால் ஏற்­பட்ட சுற்­றாடல் பாதிப்­புக்­களை சீர்­செய்யும் முக­மாக சுற்­றாடல் அமைச்சால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள திட்­டத்­திற்கு எமது அமைச்சும் உத­வி­களை வழங்கும் என்றார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சரவணபவன், அங்கஜன் இராம நாதன் மற்றும் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வட மாகாண அமைச்சர்களான ஐங்கர நேசன், குருகுலராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58