ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி

Published By: Priyatharshan

11 May, 2019 | 10:08 PM
image

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழு ஏற்கெனவே இரு இடைக்கால அறிக்கைகளை தன்னிடம் கையளித்திருப்பதாகவும்  மூன்றாவது அறிக்கை இவ்வாரம் கையளிக்கப்படும் என்றும் அம்பாறையில் கூறிய ஜனாதிபதி சிறிசேன, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ( குண்டுத்தாக்குதல்களை தடுக்கத்தவறியதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற ) அதிகாரிகளக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக தான் ஒருபோதும் பதவிவிலகப்போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதே தனது பொறுப்பு என்றும் " 9/11 அமெரிக்காவில் குண்டுத்  தாக்குதல் நடத்தப்பட்டது.வேறு நாடுகளிலும் அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்ட்டுள்ளன.அதற்காக அந்த நாடுகளில் எல்லாம் மக்கள் ஜனாதிபதியைப் பதவிவிலகுமாறு கேட்கவில்லை என்றும் கூறினார்.

மிகவும் நவீனரக தொழில்நுட்பம் இருந்தும் கூட அமெரிக்காவில் பயங்கரவாதிகள்  தாக்குதல்களை நடத்துவதை தடுக்கமுடியவில்லையே என்று கூறிய ஜனாதிபதி, இன்று இலங்கை பிளவுபட்டதொரு நாடு.கல சமூகங்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24