எதிர்வரும் சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறி­வித்­துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளரும் மக்கள் நலக் கூட்­ட­ணியின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான வைகோ கோவில்­பட்டி தொகு­தியில் போட்­டி­யி­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், நேற்று கோவில்­பட்டி தொகு­தியில் வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்­காக வந்த வைகோ தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்­றினார். இது அர­சியல் வட்­டா­ரத்தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது­கு­றித்து வைகோ கூறும் போது சாதி மோதலை தவிர்க்­கவே போட்­டியில் இருந்து வில­கு­கிறேன். கோவில்­பட்­டியில் போட்­டி­யிட தகு­தி­யான வேட்­பாளர் விநாயக் ரமேஷ்தான்.

மேலும், நான் நடு­நி­லை­யா­னவன். ஆனால், என்னை வைத்து சாதி மோதலை ஏற்­ப­டுத்த தி.மு.க. முயல்­கி­றது என்­பதை அறிந்து வேதனை அடைந்தேன். எனவே, எதிர்வரும் சட்­டப்­பே­ரவை தேர்­தலில் நான் போட்­டி­யிடப் போவதில்லை. இந்த தேர்தல் மக்கள் நலக் கூட்டணி, - தே.மு.தி.க., - த.மா.கா. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவேன் என்றார்.