பொது இடங்களில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ள முஸ்லிம் பெண்கள் - செஹான் சேமசிங்க

Published By: Daya

11 May, 2019 | 04:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பிற்கு புர்கா ஆடை அச்சுறுத்தலாக  காணப்படுகின்றது என்று  பொது மக்கள் தங்களின் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.  அத்துடன்  முஸ்லிம் பெண்களும் இவ்வாறான  நெருக்கடிகளுக்கு  பொது இடங்களில் முகம் கொடுத்துள்ளார்கள் . இவ்விடயம் தொடர்பில் எவ்வித  முறையான  வழிமுறைகளும் வகுக்கப்படவில்லை.  புர்கா ஆடையினையும்  தடை செய்தாக  குறிப்பிடப்பட்டுள்ளளே   தவிர வர்த்தமானி  வெளியிடப்படவில்லை. ஆகவே  அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு  பொய்யான வாக்குறுதிகளையே   நெருக்கடி நிலையில்  வழங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களான   தேசிய  தவ்ஹீத் ஜமாஆத், மற்றும் ஜமாத்  மில்லதுல் இப்ராஹிம் மீயா  செய்லாணி   ஆகிய அமைப்புக்களும், புர்கா  ஆடையும்   அவரகால சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றமை  மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.  இன்றும்  அரசாங்கம் அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களின் ஆதரவை  பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றது.

  கடந்த மாதம் 21ஆம்  திகதி  உயிர்த்த ஞாயிறு  அன்று  இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால்  நடத்தப்பட்ட   தொடர்  தற்கொலை குண்டுத்தாக்குதல்களில்   பல கேள்விகளையும், அரசாங்கத்தின் பொறுப்பற்ற  செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் காலங்களில்  எவ்வித  பிரச்சினைகளும் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை,  புதிதாகவே   பிரச்சினைகளை அறிமுகமாகின.  2015ஆம்  ஆண்டு பயங்கரவாதத்தை முற்றாக  இல்லாதொழித்த நிலையில்  ஆட்சி பொறுப்பேற்ற  ஐக்கிய தேசிய  கட்சியிடம் இருந்து  தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்  அச்சுறுத்தலுக்கும் உட்பட்ட   நாட்டை  பொறுப்பேற்கும் நிலை  ஏற்பட்டுள்ளது.

  தற்கொலைதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து 2019ஆம்  இலக்க முதலாவது அவசர  சட்டத்தின்  விதிமுறைகளுக்கு  அமைய  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன    தேசிய   தவ்ஹீத்  ஜ மாஆத் மற்றும்  ஜமாத்  மில்லதுல் இப்ராஹிம் மீயா  செய்லாணி    ஆகிய  அமைப்புக்களை   தீவிரவாத அமைப்புக்களாக   கருதி  கடந்த மாதம் 27ஆம்  திகதி    இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக  அறிவித்தார்.

அத்துடன் இவ்வமைப்புக்களின் அமையும் மற்றும் அமையா  சொத்துக்களை அரசுடமையாக்குவதாகவும் குறிப்பிடப்பட்டது.  ஆனால்  இவ்விடயம் தொடர்பில் அதாவது தடை செய்யப்பட்டமைக்காக   உத்தியோகப்பூர்வ  வர்த்தமானி   வெளியிடப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38