''மக­னுடன் பேசமுற்­பட்­ட­போது இரா­ணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்­குழு முன் தாயார் கதறல் 

Published By: MD.Lucias

26 Apr, 2016 | 08:50 AM
image

ஓமந்­தையில் இரா­ணு­வத்­தி­னரின் வாக­னத்தில் எனது மகனை ஏற்­றி­ய­போது அவ­ருடன் பேசு­வ­தற்கு அனும­தி­யுங்கள் என அருகில் நின்ற இரா­ணுவச்சிப்­பா­யிடம் கேட்­டி­ருந்தேன்.

இதன்­போது அவர் என்னை அடிக்க வந்­த­தோடு உரிய இடத்தில் இருக்­கு­மாறு அதி­கா­ர­தொ­னியில் தெரி­வித்தார் என்று காணாமல் போன இரா­ஜ­ரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்­ப­வரின் தாயார் நேற்று காணா மல் போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­விடம் சாட்­சி­ய­ம­ளித் தார்.

மேலும், காணா­மல்­போன எனது மகனை மீட்டுத் தருவோம் என கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் எம்மை ஏமாற்­றி­யி­ருந்­தனர். எனினும் தற் ­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எனது மகன் எனக்கு மீளக் கிடைப்பார் என்ற நம்­பிக்­கை­யுள்­ளது என்று காணாமல் போன­வர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினர் முன்­னி­லையில் மற்­று­மொரு தாயொ­ருவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­யி­லேயே காணாமல் போனோரின் உற­வுகள் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

கிளி­நொச்சி உத­ய­ந­கரைச் சேர்ந்த குறித்த தாய் காணா­மல்­போன பத்­ம­நாதன் சுலக்ஸன் (வயது 17) என்ற மகன் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

க.பொ.த சாதா­ரண தரப் பரீட்சை எழு­தி­விட்டு பெறு­பே­றுக்­காக காத்­தி­ருந்த எனது மகனை கடந்த 2008ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களின் அமைப்­பினர் பிடித்துச் சென்­றனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டு வந்த எனது மகன் எங்­க­ளுடன் வாழ்ந்து வந்தார். இந்­நி­லையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விடு­தலைப் புலி­களின் அமைப்­பினர் மீண்டும் எனது மகனைப் பிடித்துச் சென்­றனர்.

இந்­நி­லையில் இறுதி யுத்தம் ஆரம்­ப­மா­ன­தை­ய­டுத்து நாங்கள் குடும்­ப­மாக இடம்­பெ­யர்ந்த நிலையில் நான்கு நாட்கள் வட்­டு­வா­கலில் முள்­வேலி சுற்­றப்­பட்ட பகு­திக்குள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்தோம். இத­னை­ய­டுத்து நாங்கள் குடும்­ப­மாக ஆனந்­த­கு­மா­ர­சு­வாமி முகா­முக்கு மாற்­றப்­பட்டோம்.

இதே­வேளை எனது மகன் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் சென்­றதை பார்த்­த­தாக எனது உற­வி­னர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் அவரை மீட்­ப­தற்­காக பல இடங்கள் தேடி­அ­லைந்தேன். எனினும் இன்­று­வரை எனது மகன் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

காணாமல் போன மகனை மீட்­டுத்­த­ரு­மாறு குறிப்­பாக கடந்த கால ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போதும் எனது மகனை அவர்கள் மீட்­டுத்­த­ர­வில்லை. எனினும் உயி­ரோ­டுள்ள எனது மகனை தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் மீட்­டுத்­தரும் என்ற அசை­யாத நம்­பிக்கை எனக்­குள்­ளது என்றார்.

இரா­ணு­வத்­தி­ன­ரி­டமே கண­வனை ஒப்­ப­டைத்தேன்; மனைவி சாட்­சியம்

இறுதி யுத்­தத்தின் போது முள்­ளி­வாய்க்­காலில் வைத்து ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் முன்­னி­லையில் எனது கண­வரை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தேன். அதன் பின்னர் வவு­னியா யோசப் மற்றும் பூசா முகாங்­களில் எனது கணவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்கு ஒட்­டப்­பட்­டி­ருந்த பெயர் விப­ரங்கள் மூலம் அறிந்து கொண்டேன் என காணா­மல்­போன செல்­லையா விஸ்­வ­நாதன் (வயது 47) என்­ப­வரின் மனைவி சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவர் மேலும் அங்கு சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

விடு­தலைப் புலிகள் அமைப்பில் போரா­ளி­யா­க­வி­ருந்த எனது கண­வரை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது இரண்டு பிள்­ளைகள் மற்றும் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்தேன்.

பாதி­ரியார் பிரான்­சி­ஸூடன் சர­ண­டைந்த விடு­தலைப் புலி­களின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளுடன் எனது கண­வ­ரையும் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்­றனர். அதன் பின்னர் எனது கணவர் வவு­னியா யோசப் மற்றும் பூசா முகாங்­களில் உள்­ள­தாக அறிந்­தி­ருந்தேன். எனினும் அவரை சந்­திப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் எனக்குக் கிடைக்­க­வில்லை.

எனது கண­வரை மீட்­ப­தற்­காக பல இடங்கள் தேடி அலைந்து தற்­போது 7 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் கணவர் பற்­றிய எவ்­வித தக­வலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. ஆணைக்­குழு எங்­க­ளிடம் மட்­டுமே விசா­ர­ணை­களை மேற்­கொள்­கின்­றது. எனது கணவர் காணா­மற்­போ­னமை தொடர்பில் முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் ஆட்­கொ­ணர்வு மனுத்­தாக்­கலும் மேற்­கொண்­டுள்ளேன். இத்­தனை விட­யங்­களை மேற்­கொண்டும் இது­வரை எனது கண­வரை விடு­விக்­காமல் தடுத்து வைத்­துள்­ளார்கள். தயவு செய்து உயி­ருடன் உள்ள எனது கண­வரை விட்டு விடுங்கள் என அவர் கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

இரா­ணுவப் பேருந்­தி­லேயே எனது மகனை இறு­தி­யாகக் கண்டேன்: தாய் சாட்­சியம்

இரா­ணு­வத்­தினர் எனது மகனை பேருந்தில் ஏற்றிச் செல்­வதை ஓமந்தைப் பகு­தியில் வைத்துக் கண்­டி­ருந்தேன். அதன் பின்னர் அவரை இன்­று­வரை காண­வில்லை என தாயொ­ருவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

கிளி­நொச்சி விவே­கா­னந்த நகரை சேர்ந்த காணாமல் போன இரா­ஜ­சட்னம் ஜெயராஜ் ( வயது 28) என்­ப­வரின் தாயார் மேற்­கண்­ட­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் முள்­ளி­வாய்­காலில் இருந்து எங்­களை இரா­ணு­வத்­தினர் பேருந்­து­களில் ஏற்றி ஓமந்­தைக்கு கொண்டு சென்று இறக்கி விட்­டனர். இதன்­போது மற்­று­மொரு பேருந்தில் சில இளை­ஞர்கள் ஏற்றி வரப்­பட்டு நாமி­ருந்த பகு­தியில் இறக்கி விடப்­பட்டு மீண்டும் அங்கு நின்ற இரா­ணு­வத்­தினர் பிறி­தொரு பேருந்தில் அவர்­களை ஏற்­றி­னார்கள். இவ்­வாறு ஏற்றும் போது எனது மகனும் அங்கு காணப்­பட்­டி­ருந்தார். அதுவே எனது மகனை பார்த்த கடைசி நாளாகும்.

எனது மகனை அவ்­வாறு கண்ட நிலையில் எனது மக­னுடன் பேசு­வ­தற்கு அனு­ம­தி­யுங்கள் என அருகில் நின்ற இரா­ணுவ சிப்­பா­யிடம் கேட்­டி­ருந்தேன். இதன்­போது அவர் என்னை அடிக்க வந்­த­தோடு உரிய இடத்தில் இருக்­கு­மாறு அதிகாரதொனியில் தெரிவித்ததுடன் விசாரணைகளின் பின்னர் எனது மகனை இராணுவத்தினர் விடுவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை. எனது மகனை இராணுவம் எதற்காக இன்று வரை தடுத்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கவில்லை. எனவே தயவு செய்து எனது மகனை விட்டு விடுங்கள் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.

நேற்றைய தினம் ஆரம்பமான குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் தொடர்ச்சியாக எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17