சுவாரெஸ் 4 கோல்களை அடிக்க வென்றது பார்­சி­லோனா

Published By: Raam

26 Apr, 2016 | 08:42 AM
image

ஸ்பெய்னில் நடந்­து­வரும் லா லிகா கால்­பந்து லீக் போட்­டியில், பார்­சி­லோனா அணி 6–-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்­தி­யது.


கேம்ப் நோ மைதா­னத்தில் நேற்று முன்­தினம் நடைபெற்ற இப்­போட்­டியில், பார்­சி­லோனா அணி நட்­சத்­திர வீரர் லயனல் மெஸ்ஸி 12ஆவது நிமி­டத்தில் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார்.


முதல் பாதி ஆட்ட முடிவில் பார்­சி­லோனா 1–-0 என முன்­னிலை வகித்­தது. இரண்­டா­வது பாதியில் அந்த அணி முழு­மை­யாக ஆதிக்கம் செலுத்­தி­யது. அபா­ர­மாக விளை­யா­டிய லூயிஸ் சுவாரெஸ் 4 கோல்களை அடித்து அசத்­தினார் (63’, 74’, 77’, 88ஆவது நிமிடம்). இதில் 3 கோல்கள் பெனால்டி கிக் வாய்ப்பில் அடிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. நெய்மர் (85ஆவது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.


ஆட்ட நேர முடிவில் பார்­சி­லோனா அணி 6–-0 என்ற கோல் கணக்கில் அபா­ர­மாக வென்­றது. சுவாரெஸ் 4, மெஸ்ஸி, நெய்மர் தலா 1 கோல் போட்­டனர். சுவாரெஸ் தொடர்ந்து 2ஆவது போட்­டியில் 4 கோல்களை அடித்­துள்ளார். நடப்பு தொடரில் 34 கோல்களை அடித்­துள்ள அவர், கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவை (31 கோல்கள்) பின்­னுக்குத் தள்ளி முத­லிடம் பிடித்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41