பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழையுமா சென்னை?

Published By: Vishnu

10 May, 2019 | 09:24 PM
image

சென்னை அணிக்கு எதிரான  2 ஆவது சுற்று வெளியேற்றால் ஆட்டத்தில் டெல்லி அணி 147 ஓட்டங்களை குவித்துள்ளன.

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமான  2 ஆவது சுற்று வெறியேற்றல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமாகின.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி களத்தடுப்பை தேர்வுசெய்த டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்தது.

பிரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கும்போது டெல்லி அணியின் முதலாவது விக்கெட் 2.3 ஓவருக்கு வீழ்த்தப்பட்டது. அந்த வகையில் பிரித்வி ஷா 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுணையில் தவான் 5.2 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் டெல்லி அணியின் முதல் இரண்டு விக்கெட்டும் 37 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட்டுக்காக முன்ரோ மற்றும் அணித் தலைவர் ஸ்ரேயஸ் அய்யர் ஜோடி சேர்ந்தாட டெல்லி அணி 7.4 ஓவரில் 50 ஓட்டங்களை பெற்றது. 

முன்ரோ 22 ஓட்டத்துடனம், ஸ்ரேயஸ் அய்யர் 4 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் 9 ஆவது ஓவருக்காக பிராவோ பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் முன்ரோ 27 ஓட்டத்துடன் ஆட்டமிழந்ததுடன், 11.3 ஆவது ஓவரில் ஸ்ரேயஸ் அய்யர் 13 ஓட்டத்துடன் ரய்னாவுடன் பிடிகொடுத்து வெளியேறினர்.

அவரைத் தொடர்ந்து வந்த அக்ஸர் படேலும் 12.5 ஆவது ஓவரில் 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 6 ஆவது விக்கெட்டுக்காக ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் மற்றும் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்தாட டெல்லி அணி 15 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை பெற்றது.

15.2 ஆவது பந்தில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஒரு ஆறு ஒட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஓட்டங்களை தொட்டது. எனினும் ரதர்ஃபோர்ட் 12 ஓட்டத்துடன் அதே ஓவரின் 5 ஆவது பந்தில் வோட்சனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதற்கடுத்து கீமோபவுல் களமறங்கி துடுப்பெடுத்தாட டெல்லி அணி 17 ஆவது ஓவரில் 117 ஓட்டங்களையும் பெற 17.5 ஆவது ஓவரில் பிராவோன் பந்தை எதிர்கொண்ட கீமோபவுல் 3 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க 18.4 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் 38 ஓட்டத்துடன் பிராவோவிடம் பிடிகொடுத்து வெளியேற அடுத்து வந்த டிரெண்ட் போல்டும் 19.3 ஆவது ஓவரல் 6 ஓட்டத்துடன்  ஜடேஜாவின் சுழலில் சிக்கி வெளியேறினார்.(137-9).

இதையடுத்து இஷான் சர்மா களமிறங்கி இறுதி இரு பந்துகளில் 4 மற்றும் 6 ஓட்டத்தை அடுத்தடுத்து விளாச டெல்லி அணி 20 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டத்தை குவித்தது.

பந்து வீச்சில் சென்‍னை அணிசார்பில் ஜடேஜா 3, விக்கெட்டுக்களையும், பிராவோ மற்றும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுக்களையும் தீபக் சஹார், இம்ரான் தாகீர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49