இ.தொ. காவின் மே தின கூட்­டம்  நுவ­ரெ­லியாவில் 

Published By: MD.Lucias

26 Apr, 2016 | 08:40 AM
image

உழைக்கும் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக தொடர்ந்தும் போராடும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், இம்முறை தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்கு நிரந்­தரத் தீர்வை வலி­யு­றுத்தி நுவ­ரெ­லியா நகரில் மே தின கூட்­டத்தை நடத்த உள்­ளது. தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடி­யா­மலும் அதனை கூறு­வ­தற்கு வழி­யில்­லா­மலும் தவிப்­ப­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார்.

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தனது மேதினக் கூட்­டத்தை எதிர்­வரும் முதலாம் திகதி நுவ­ரெ­லியா நகரில் காலை 10 மணிக்கு நடத்­து­வ­தற்கு ஏற்­பாடுசெய்­துள்­ளது. பாரா­ளுமன்ற உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளருமான ஆறு­முகம் தொண்­டமான் உள்­ளிட்ட கட்­சியின் செயற்­பாட்­டா­ளர்கள் மூத்த தொழிற்­சங்கவாதிகள் என பலரும் இதில் கலந்துகொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் முத்து சிவ­லிங்கம் குறிப்­பி­டு­கையில்;

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விவ­காரம் இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­கின்­றது. அதேபோன்று அந்த மக்­களின் இன்­னோ­ரன்ன பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வின்றி நெருக்­க­டி­களை எதிர் கொண்­டுள்­ளனர். ஆகவே தோட்டத்தொழி­லா­ளர்கள் எதிர்கொள்ளும் சம்­பள உயர்வு விவ­காரம் மற்றும் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்வை பெற்றுக் கொள்ள வேண்­டி­யதன் அவசியம் தொடர்பில் எதிர் வரும் மே தினக் கூட்­டத்தின் போது வலி­யு­றுத்த உள்ளோம்.

கடந்த பல தசாப்­த­கா­ல­மாக தோட்டத் தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளுக்­காக பல்­வேறு போராட்­டங்­க­ளுக்கு தலை­மை தாங்கி அதில் வெற்­றியும் ­பெற்­றுள்ளோம். எதிர்காலத்­திலும் அவ்­வாறே முன்­னெ­டுப்போம். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டுவோம். எதிர்வரும் மே தினத்தன்று அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் நுவரெலியா நகருக்கு வந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01