"முஸ்லிம் கடை­களில் பொருட்­களை வாங்காது, அவர்களை புறக்­க­ணி­யுங்கள்": இன­வாத குழுக்களின் பிர­சாரங்களிற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்காததேன்..?

Published By: J.G.Stephan

10 May, 2019 | 04:40 PM
image

(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசஸீம் )

முஸ்லிம் கடை­களில் பொருட்­களை வாங்க வேண்டாம், முஸ்லிம் கடை­களை புறக்­க­ணி­யுங்கள் என ஏனைய இன­வாத குழுக்கள் பரப்பும் செய்­திகள் குறித்து அர­சாங்கம் அக்­கறை செலுத்­தாதது ஏன்? இது தேசி­ய­மாக பாரிய பிளவை ஏற்­ப­டுத்தும் என ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி நேற்று சபையில் தெரி­வித்திருந்தார்.

பாட­சாலை மாண­வர்­களின் நம்­பிக்­கையை வெற்­றி­கொள்ள முடி­யாத அர­சாங்­கத்தால் எவ்­வாறு சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­களின் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். 

விசேட வியா­பாரப் பண்ட அற­வீ­டுகள் கட்­ட­ளைச்­சட்ட ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

மேலும்,  இன்று பயங்­க­ர­வாத தாக்­கு­தலால் மட்­டுமே நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி காண­வில்லை. இந்த தாக்­கு­த­லுக்கு முன்­னரே நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சியில் தான் இருந்­தது. இந்த தாக்­கு­த­லுடன் அதன் தாக்கம் இன்­னமும் அதி­க­ரித்­துள்­ளது. யுத்­தத்தின் பின்னர் நாம் நம்­பி­யி­ருந்த ஒரே விடயம் சுற்­று­லாத்­துறை மட்­டு­மே­யாகும். இன்று அதுவும் நாச­மா­கி­யுள்­ளது. ஆகவே ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தலில் எமது மக்­களின் உயிர்கள் பறிக்­கப்­பட்­டதும் நாட்டில் நம்­பிக்கை இழக்­கப்­பட்­டது  மட்­டு­மல்­லாது நீண்­ட­காலம் எம்மை நெருக்கும் பொரு­ளா­தா­ரமும்  வீழ்ச்சி  கண்­டுள்­ளது.

அர­சாங்­கத்தின் மோச­மான பொரு­ளா­தார கொள்கை இந்த சம்­ப­வத்­துடன் மேலும் நெருக்­க­டிக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.  இருந்­ததை விடவும் எமது கடன் அதி­க­ரித்­துள்­ளது. இவை அனைத்­திற்கும் இன்று பயங்­க­ர­வா­தத்தை காரணம் காட்­டு­கின்­றனர். அர­சாங்கம் செய்த பாவங்­களை எல்லாம் பயங்­க­ரவா­த தாக்­கு­தலின் மீது போட்டு தப்­பித்­துக்­கொள்­ளவே அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. 

இன்று நாட்டின் பாரிய ஹோட்­டல்கள் மட்டும் அல்ல, சாதா­ரண நடுத்­தர சுற்­றுலா விடு­தி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இவை அனைத்தின் தாக்­கமும் நாட்­டுக்கு பாரிய தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்தும். முஸ்லிம் மக்­களின் கடை­க­ளுக்கு மக்கள் செல்ல மறுக்­கின்­றனர். முஸ்லிம் கடை­களில் பொருட்­களை கொள்­வ­னவு செய்ய வேண்டாம் என்ற அநா­வ­சிய செய்­தி­களை பரப்பி மக்­களை குழப்­பி­வ­ரு­கின்­றனர். இது நாட்­டுக்கு தான் பிரச்­சி­னை­யாக அமையும். இந்த தாக்­கு­தலை ஒரு இனத்தின் தாக்­கு­த­லாக மட்­டுமே அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டாம். 

இன­வா­தத்தை மத­வா­தத்தை இதில் உரு­வாக்க வேண்டாம். அர­சாங்கம் இதற்கு தீர்வு காண எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்க வில்லை. அர­சாங்கம் இவற்றை கருத்தில் கொள்­ளாது அர­சியல் கார­ணி­களை மட்­டுமே கருத்தில் கொண்டு  செயற்­பட்டு வரு­கின்­றது. இலங்­கையில் தொழில் பேட்­டை­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நிலைமை குறித்து எவரும் கருத்தில் கொள்­ள­வில்லை. ஜப்­பானில் புகை­யி­ரதம் ஒன்று தடம்­பு­ரண்­டதால் போக்­கு­வ­ரத்து அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்தார். இலங்­கையில் இவர்கள் இவ்­வ­ளவு பெரிய பிரச்­சி­னை­யிலும் தமது அமைச்­சு­களை தக்­க­வைக்­கவே  அக்­கறை செலுத்தி வரு­கின்­றனர். 

நாட்டில் சுற்­று­லாத்­துறை வீழ்ச்சி கண்டால்  அதற்­கான பொறுப்பை சுற்­று­லாத்­துறை அமைச்சர் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். நாட்டின் பொரு­ளா­தாரம்  வீழ்ச்சி கண்டால் நிதி அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் இவர்கள் பொறுப்­புக்­கூ­று­வ­தில்லை. பொய்­களை மட்­டுமே கூறு­கின்­றனர். இவர்கள் அனை­வ­ருக்கும்  ஒன்று நன்­றா­கவே தெரியும். நாட்டின் பொரு­ளா­தாரம்  வீழ்ச்சி கண்டால் மக்கள் மீது வரியை சுமத்­தலாம் மக்கள் கடன்­களை கட்­டு­வார்கள் என்­பதை நன்­றாக அறிந்து வைத்­துள்­ளனர்.

எமது அர­சியல் வாதி­க­ளுக்கு நாட்டின் தூர­நோக்கு திட்டம் என ஒன்றும் இல்லை . அடுத்த ஒரு வரு­டத்தில் நாட்­டுக்கு வரும் நெருக்­கடி குறித்து இந்த ஆட்சியாளர்கள் எந்த முன்னாயத்தமும் இல்லாமலேயே ஆட்சி செய்கின்றனர்.  

பாடசாலை மாணவர்களின் நம்பிக்கையையே வெற்றிகொள்ள முடியாத இந்த அரசாங்கம் எவ்வாறு சர்வதேச முதலீட்டாளர்களின்  நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆட்சியாளர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்வு காண முடியாது.

மேலும், இது பலவீனமான அரசாங்கம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01