"பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை"

Published By: Vishnu

10 May, 2019 | 02:47 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம்  ஜனாதிபதிக்கில்லை எனத் தெரிவித்த தினேஷ் குணவர்தன, 19 ஆம் திருத்தம் மூலம் அந்த அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்றில் இன்று குறிப்பிட்டார்.

அத்துடன் அவசரகால சட்டம் அமுலில் இருப்பதால்தான் மக்கள் பாதுகாப்பு தொடர்பாக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். சோதனை நடவடிக்கையை பூரணமாக மேற்கொள்ளும்வரை அவசரகால சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரவேண்டும். மத்தரசாக்களில் அரச மொழிகளில் அல்லாமல் வேறு மொழிகளில் கற்பிக்க தேவையில்லை. அதனால் மத்ரசாக்களில் கற்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட வேண்டும்

இந்த பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அவ்வாறா நிலையை ஏற்படுத்தி மக்களை வீதிக்கிறக்கவேண்டாம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் தேவை என்றால் அதனை மேற்கொள்ளலாம். மதத்தலைவர்களும் அதனையே தெரிவிக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16