(எம்.எம்.மின்ஹாஜ்)

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்குடன் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயலணியின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாவித்திரி குணசேகர தலைமையிலான பெணகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயலணி கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அதிகளவில் அவதானம் செலுத்தியிருந்தார்.

குறித்த செயலணி அறிக்கையை கொண்டு விசேட பொறிமுறை தயாரிக்கப்படவுள்ளது. அதன்பிரகாரம் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.