சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா டெல்லி!

Published By: Vishnu

10 May, 2019 | 11:13 AM
image

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2 ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இதேவேளை நேற்றுமுன்தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி 2 ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறி, ஐதராபாத்தை வெளியேற்றியது.

இந்த நிலையில் தோனி தலைமையிலான சென்னை அணிக்கும் ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான இராண்டாவது தகுதி சுற்றுப் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது.

இதுவரை மூன்று முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றுள்ள சென்னை அணி 8 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேட்கையில் உள்ளது. 

இத் தொடரில் டெல்லியை எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்றது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 20 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46