(க.கமலநாதன்)

பிரபாகரனின் 30 வருடகால ஆயுத போராட்டத்தினால் பெற்றுக்கொள்ள முடியாததை, கூட்டமைப்பின் தலைவர் சூட்சுமமான  அரசியல் காயநகர்த்தல்கள் மூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என பிவிதுரு ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மௌனம் சாதிப்பதாகவும்  வடக்கு மற்றும் மலையக தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கை அடங்கிய ஆவனமே வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளதாகவும்  பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்

வரதராஜ பெருமாள் தனி நாடு கோரிய போது அப்போதைய ஜனாதிபதி பிரேமாதாஸ செய்தது போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடக்கு மாகாணசபையை களைத்து அதிகாரத்தை தமது கையிலெடுக்க வேண்டும். இல்லாவி;ட்டால் வடக்கு முதலமைச்சரை எச்சரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.