சிங்கள, தமிழ் அடிப்படைவாதிகளை ஓரம்கட்டி நாட்டை கட்டியெழுப்புவோம்

28 Nov, 2015 | 10:36 AM
image

சிங்கள தமிழ் அடிப்படைவாதிகளை ஓரம்கட்டி நாட்டை கட்டியெழுப்ப நாமனைவரும் ஒன்றிணைவோம். எனவே எஞ்சியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் எம்மோடு இணைய வேண்டும் என நேற்று சபையில் அழைப்பு விடுத்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, இணைந்த எதிர்கட்சிக் கூட்டணி எனக் கூறிக்கொள்ளும் அணியில் 10 எம்.பிக்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் லக்0ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

1956 இல் தமிழ் மக்கள் தமக்கான மொழி உரிமையை கேட்டனர். ஆனால் அதனை நாம் வழங்கவில்லை. எனவே இப் பிரச்சினை யுத்தம் வரை பரிணாம வளர்ச்சிக் கண்டது.

எனவே வட கிழக்கு பிரச்சினைக்கும் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது தொடர்வதற்குமான பொறுப்பை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாட்டில் சிங்கள அடிப்படைவாதம் ஓரம் கட்டப்பட வேண்டும். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொண்டு தமிழ் அடிப்படைவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். சர்வதேச ரீதியில் எமக்கெதிரான அழுத்தங்களை வெற்றி கொள்ள வேண்டும். இதற்காக நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டியது அத்தியாவசியமானது.

இன்று வரலாற்றில் முதன்முறையான ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட பிரச்சினைகளை எம்மால் வெற்றிகொள்ள முடியும். இதனால் எஞ்சியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் அரசுடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

இணைந்த எதிர்கட்சி எனக் கூறிக் கொள்ளும் ஐ.ம.சு.முன்னணியின் 10 எம்.பிக்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். இது வரவேற்புக்குரியதாகும்.

நாட்டில் இன்று அரச வருமானம் குறைந்துள்ளது கடந்த ஆட்சிக் களத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரவில்லை. வெளிநாடுகளுடன் நட்புறவுகள் பேணப்படவில்லை. 

அத்தோடு நாட்டில் சட்டம் ஜனநாயகம் நல்லாட்சி காணப்படவில்லை. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரவில்லை.  ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் நல்லாட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கை வர அணிதிரண்டுள்ளனர்.
எனவே அதனை இலக்காகக் வைத்தே அரசின் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் அதிகரிக்கும் போது பொருளாதாரம் அபிவிருத்தியடையும்.

இச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ளவர்களையும் வடகிழக்கில் வந்து முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்க வேண்டுமென நான் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58