காலி மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களுக்கு “என்ன நடக்கப் போகின்றது” என்பதை 2ஆம் திகதி பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்தார். 

“இயற்கை நீதியின்” அடிப்படையில் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி கால அவகாசம் வழங்கிவிட்டார். இனியும் அதனை நீடிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(ப.பன்னீர்செல்வம்)