பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..!

Published By: Raam

25 Apr, 2016 | 04:05 PM
image

உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. 

இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.

இதனால்  சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை காரியாலயங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை அன்மித்த சொத்துக்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை காரியாலம் சென் பிரான்சிஸ்கோவின் கடற்கரையில் 4 இலட்சத்து 30 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனம் மிகவும் தாழ்வான பகுதியில் தலைமை காரியாலங்களை அமைப்பதற்கு தேர்ந்தெடுத்தது ஏன் என புரியவில்லை என கலிபோர்னியா வளர்ச்சி கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.6 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரக் கூடும் என்பதால் பேஸ்புக் நிறுவனம் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுளும், பேஸ்புக்கும் தங்களின் தலைமையகங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதே சிறந்தது.

இருப்பினும் கூகுள் நிறுவனம்  இடத்தை மாற்றுவது அவர்களின் ராடார்களை பாதிக்கும் என்பதால் சிக்கலான நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிறுவனங்கள் மட்டுமின்றி, கடுமையான புயலால் கடல் மட்டம் உயரும் போது கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுமார் 100 பில்லியன் அமெரிக்கா டொலர் மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26