மஹிந்த ராஜபக்ஷ என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது அவருடைய தேர்தல் தோல்வி தான். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ தற்போது குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

இவ்விடயம் இலங்கையர் மாத்திரமல்லாமல் உலக மக்களே அறிந்த ஒன்றாகும்.

இது இவ்வாறு இருக்க, தாய்லாந்தில் வேடிக்கையான  விடயம் ஒன்று பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தில் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறும்  நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கடந்த 23 ஆம் திகதி தாய்லாந்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.  

இந்த விஜயத்தின் போது தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. 

குறித்த ஹோட்டலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றில் ' அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்கின்றோம் " என எழுதப்பட்டிருந்தது.

இதனை ஒருவர் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.