இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளி விவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். 

நாளை காலை யாழ்ப்பாணம் செல்லும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்தின் இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடவுள்ளதுடன் கலந்துரையாடவுள்ளார். மேலும்                       மறவன்புலோ வீட்டுத்திட்டத்தையும் சுவீடன் அமைச்சர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(ரொபட் அன்டனி)