சீகிரிய குகை ஓவியங்களில் ஒரு பகுதியில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

சீகிரிய குகையின் புனரமைப்பு பணிகளின் போது ஓவியங்களில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் தவறான கருத்தாகும். எனினும் இது தொடர்பாக ஆராய தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.