வவுனியாவில்  மூன்று கல்வி  நிலையங்கள் மட்டுமே பதிவு

Published By: Digital Desk 4

07 May, 2019 | 11:24 AM
image

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் நூற்றிற்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு நகரசபைக்கு வருடா வருடம் தொழில் வரி செலுத்தி வருவதாக நகரசபையினர் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறியும் சட்டத்தினூடாக நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையங்களின் விபரங்களை கோரியபோதே மேற்கண்டவாறு நகரசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் தனியார் கல்வி நிலையங்கள் நூற்றுக்குமேற்பட்டவை இயங்கி வரும் நிலையில் பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு நகரசபைக்கு தொழில் வரி செலுத்திவரும் தனியார் கல்வி நிலையங்களாக மூன்று நிலையங்கள் மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நகரில் இயங்கும் பல தனியார் கல்வி நிலையங்களை அரச சேவையிலுள்ள ஆசிரியர்களே இயக்குநர்களாக வழிநடத்தி வருகின்ற நிலையில் அரச சட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகம், நகரசபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட தவறியுள்ளதையே இவ்விடயம் எடுத்துக்காட்டி நிற்கின்றது. 

மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை தமது தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. வசதிகளற்ற நிலையங்களை அமைத்து மாணவர்களிடம் பணம் கறக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வரும் கல்வி நிலையங்களை நடத்திவரும்  தனியார் கல்வி நிர்வாகத்தினர் நகரிலுள்ள சட்டதிட்டங்களை பின்பற்றத் தவறியுள்ளனர். 

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் செயற்படும் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் குறித்த மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செயலகத்தில் பதிவு செய்து அனுமதியைப் பெற்று ஒவ்வொரு வருடமும் நகரசபையில் தொழில் வரியினை மாத்திரம் செலுத்திவருவதாக நகரசபையினருக்கு தகவல் அறியும் சட்டத்தில் கோரிய தகவல்களுக்கு இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21