ஐஎஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்தது ஏன்? சிறிசேன விளக்கம்

Published By: Rajeeban

07 May, 2019 | 11:12 AM
image

 ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை  வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசியின் பிராந்திய மொழிச்சேவையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் அவர்கள் ஏன் இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகின் வலுவான நாடுகளுடன் நேரடியாக மோதுவதற்கான திறன் இல்லாத காரணத்தினாலா ஐஎஸ் அமைப்பு அமைதி நிலவும் நாடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது என நான் கேள்வி எழுப்பவிரும்புகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பு தான் இன்னமும் அழிந்துவிடவில்லை  என்பதை சொல்வதற்காக தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்ததா எனவும் சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

புலனாய்வு பிரிவின் உயர் மட்டத்தில்உள்ளவர்களிற்கு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற தகவல் கிடைத்தது எனினும் அவர்கள் அதனை எனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கள் கடமையை புறக்கணித்தனர் அதன் காரணமாகவே நான் நடவடிக்கை எடுத்தேன் என தெரிவித்துள்ள சிறிசேன இவர்களை பதவியிலிருந்து நீக்கியுள்ளேன், விசாரணைகளிற்காக குழுவொன்றை நியமித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த நாட்டிலும் குண்டுவெடிப்பினை தொடர்ந்து ஜனாதிபதி பதவிவிலகுவதில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதே எனது பணி என நான் கருதுகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44