யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது  ; நீதிமன்ற தீர்மானம் புதன்கிழமை

Published By: Digital Desk 4

06 May, 2019 | 05:05 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும்  பிணையில் விடுவிக்கப்படுவதா?  அல்லது வழக்கிலிலிருந்து அவர்களை விடுவிப்பதா? என்ற  கட்டளை எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் அறிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் அணைத்தும் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.

சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், செலஸ்ரின், கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் முற்பட்டனர்.

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியும் மன்றில் முன்னிலையானார்.

மாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை சமர்ப்பித்தனர்.

சந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என விதி தேவையற்றது என பொலிஸார் மன்றுரைத்தனர்.

இருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை நாளைமறுதினம் வழங்குவதாக வழக்கை ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30