வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல உச்சிமையில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் 15 காடு எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த நீர் வளமிக்க காட்டுப்பகுதிக்கு இனம் தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் 100 மேற்பட்ட கருப்பன் தேயிலை மரங்களுடன் பானாபுல் காடு சாம்பலாகி உள்ளது.

கடந்த காலங்களில் மலையக காட்டுப்பகுதியில் தீ பரவல் சம்பவம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் மழை காலநிலை காணப்பட்டதால் தீ வைப்பு சம்பவம் குறிந்திருந்த நிலையில், மீண்டும் வெய்யில் கால நிலையினால் தீ வைக்கும் விசம செயல் ஆரம்பித்துள்ளதாக   பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

- நோட்டன் பிரிட்ஜ் நிருபர்