கட்டுப்பாடற்ற ஜமாஅத்களே பிரச்சினைக்குரியவை

Published By: Digital Desk 4

05 May, 2019 | 10:30 PM
image

கட்டுப்பாடற்ற ஜமாத் அமைப்புக்களே பிரச்சினைக்குரியவையாக உள்ளன. பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் இலங்கைச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பதில் நாம் கரிசனை கொண்டுள்ளோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளர்  மௌலவி எம்.எஸ்.எம் தாஸீம் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: 

கேள்வி:- கிறிஸ்தவ சமூகத்தன் புனித நாளொன்றில் நடைபெற்ற மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் அதற்கு பின்னரான நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- சகோதர சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஜம்இய்யத்துல் உலமாசபை உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே மிக வன்மையாக கண்டிக்கின்றது. இஸ்லாம் இவ்வாறான விடயங்களை அனுமதிக்கவே இல்லை. ஆகவேஇ இந்த தாக்குதல்களுக்கு இஸ்லாத்தினை காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

நாட்டின் அனைத்து தரப்பினரினதும் அன்றாட வாழ்வியல் விடயங்கள் உறைநிலைக்குச் சென்றுள்ளன. சாதாரண கூலித்தொழிலாளியின் வருமானம் முதல் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஆகவே மீண்டும் சுமுகமான நிலைமையொன்றையும் இனங்கள் மதங்களுக்கிடையில் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அனைவரும் ஒன்றிணைந்தே மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இருக்கின்றோம். இதனை சர்வமதத்தலைவர் இத்தபான தம்மாலன்காரதேரர் உள்ளிட்ட அனைத்து மதத்தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு கரம்கோர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. 

கேள்வி:- குண்டுத்தாக்குதலின் கொடூரத்தால் ஏற்படவிருந்த பதற்றத்தினை தணிப்பதில் ஏனைய மதத்தலைவர்களின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- விசேடமாக பாதிக்கப்பட்ட சகோதர கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அன்பான வார்த்தைகளால் ஆற்றுப்படுத்திய பேராயர் ரஞ்சித் ஆண்டகையின் உயரிய செயற்பாடு பாராட்டுதற்குரியது. அவருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். அத்துடன் ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித்தலைவலர் ஆகியோருக்கும் எமது நன்றிகள். அதேபோன்று பௌத்தஇ இந்து மதத்தலைவர்களும் கூட்டிணைந்து சர்வ மதத்தலைவர்கள் கூட்டங்களையும்இ சிவில் சமூக கலந்துரையாடல்களையும் நடத்தி மோசமான விளைவுகளை தடுப்பதில் பெரும்பாங்காற்றியிருக்கின்றனர். 

கேள்வி:- தௌஹீத் ஜமாஅத்துகளை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஜம்இய்யத்துல் உலமா சபையின் அங்கீகாரம் பெற்று எம்முடன் இணைந்து செயற்படுகின்ற பல ஜமாஅத் அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனாலும் எம்மிலிருந்து விலகியிருந்து செயற்படுகின்ற ஜமாஅத் இல்லாமலில்லை. கட்டுப்பாடற்ற வகையில் செயற்படும் ஒருசில ஜமாஅத்துக்கள் தான் பிரச்சினைக்குரியவையாக இருக்கின்றன. 

கேள்வி:- உங்களுடைய கட்டுப்பாடிற்குள் இருந்து செயற்படாத ஜமாஅத்துக்கள் தொடர்பில் நீங்கள் ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை? 

பதில்:- தடி எடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்கள் என்ற தோரணையில் சில தரப்புக்கள் செயற்பட்டன. ஜம்இய்யத்துல் உலமா எம்மை கட்டுப்படுத்துவதா? என்று அவர்களின் உள்ளத்தில் இருக்கும் கர்வத்தினால் தனியாக செயற்பட விளைந்தார்கள். 

ஆகவேஇ நாம் முட்டிமோதச் சென்றிருக்கவில்லை. ஆனால் இத்தகையதொரு பாரதூரமான நிலைமைகள் ஏற்பட்டதன் பின்னர் நாம் அத்தகைய அமைப்புக்கள் தொடர்பில் கரிசனைகளைக் கொள்கின்றோம். இஸ்லாத்தின் பால் செயற்படும் அமைப்புக்கள் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களுக்கும் உட்பட்டதாக செயற்பட வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தியுள்ளோம். 

குறிப்பாகஇ பாதுகாப்புத்தரப்பினர் மாறுபட்ட சிந்தனையில் இயங்கும் அமைப்புக்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆராய்வுகளை முன்னெடுத்துவருகின்றனர். அச்செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் நாமும் அரசாங்கத்தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தி இறுக்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதில் பின்னிற்கப்போவதில்லை. 

கேள்வி:- முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடை அணிவதற்கான தடை அவசரகால நிலைமையில் விதிக்கப்பட்டுள்ளபோதும் அதனை நிரந்தரமாக கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஆடை அணிவதற்கான சுதந்திரம் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது. அதேபோன்று தான் முஸ்லிம் பெண்களுக்கும் அவ்வாறு ஆடை அணிவதற்கு சுதந்திரம் உள்ளது. இருப்பினும்இ நாட்டில் இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் காரணமாக நாம் அரசாங்கம் தடைசெய்வதற்கு முன்னதாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் முகமாக முகம் தெரியுமாறு ஆடைகளை அணியுமாறு அறிவித்திருந்தோம். 

ஆகவேஇ நாட்டின் பாதுகாப்பு கருதி சட்டங்கள் இயற்றப்படுமாகவிருந்தால் அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டியது எமது கடமையாகின்றது. மேலும் நாம் முஸ்லிம் பெண்கள் கறுப்பு உடை தான் அணிய வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. ஏனைய வர்ணங்களிலும் அணியாலம் என்றே கூறுகின்றோம். ஆடை அணிதல் என்பது தனிப்பட்ட மனித சுதந்திரமும் உரிமையுமாகின்றது. 

கேள்வி:- இலங்கையில் உள்ள மதரஸாக்கள் சம்பந்தமாக சந்தேகம் வெளியிடப்படுகின்றதே?

பதில்:- அத்தகைய கருத்துக்களை நாம் முற்றாக மறுக்கின்றோம். இலங்கையில் உள்ள எந்தவொரு மதரஸாக்களும் பயங்கரவாதத்தினையோ அல்லது தீவிரவாதத்தினையோ போதிக்கவே இல்லை. அத்துடன்இ மதரஸாக்களில் உள்ள எந்தவொரு இளம் சமுதாயத்தினரும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடவுமில்லை. தற்கொலை குண்டுதாரிகள் எவருமே மதரஸாக்களில் கற்றவர்கள் கிடையாது. ஆகவேஇ மதரஸாக்கள் என்றுமே இத்தகைய கொடூரமான விடயங்களுக்கான உருவாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடவுமில்லை. எதிர்காலத்தில் ஈடுபடப்போவதுமில்லை. 

கேள்வி:- பள்ளிவாசல்களில் வாள்கள் உள்ளிட்ட வன்முறைக்கு வித்திடக்கூடிய பொருட்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமையானது இஸ்லாத்தின் புனித இடங்களுக்கு கறை ஏற்படுத்துவதாக அல்லவா இருக்கின்றது?

பதில்:- பள்ளிவாசல்களில் வாள்களோ வன்முறைக்குரிய விடயங்களையோ வைத்திருக்கவே கூடாது. அவ்வாறு வைத்திருப்பதானது தவறு என்பதோடு அத்தகைய நிலைமைகளில் உரியவர்களை இலங்கை சட்டத்திற்கு உட்படுத்த முடியும். 

ஆனால்இ தற்போதைய சூழலில் பள்ளிவாசலில் ஒரு கத்தி இருந்தால் கூட அது பூதாகரமாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஓரிரு பள்ளிவாயல்களில் அத்தகைய பொருட்கள் மீட்கப்பட்டிருந்தால் அது குற்றச் செயற்படுகளுக்கு வழிசமைத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். 

ஆனால்இ அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் உபகரணங்கள் பள்ளிவாசல்களில் இருந்து எடுக்கப்படுவதாகத்தான் தகவல்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. இந்த விடயம் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தினையும் தற்போது எம்மத்தியில் உருவாக்கின்றது. 

கேள்வி:- 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் தம்புள்ள முதல் திகன வரையில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குச்செயற்பாடுகளுக்கு நீதி நிலைநாட்டப்படாமையின் விரக்தி அடிப்படைவாதம் மேலெழுவதற்கு வித்திட்டிருக்கும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- அந்தவிடயத்தினையும் இந்த தாக்குதல்களையும் ஒன்றிணைத்து பார்க்கவில்லை. இருப்பினும் தாக்குதல்களின் பின்னரான நெருக்கடி நிலைமைகளால் எமது இளைய சமூதாயத்தினர் வழிதவறிபோய்விடுவார்களோ என்ற இயல்பான அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவேஇ இளைய சமுகத்தினை பாதுகாத்து வழிபடுத்துவது எமக்குள்ள பாரிய பொறுப்பாகின்றது. 

கேள்வி:- தற்போதைய சூழலில் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ரமழானை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுத்துகின்றீர்கள்? 

பதில்:- கசப்பான சம்பவங்களால் கவலைகளும்இ வேதனைகளும்இ காயங்களும் நிறைந்தவொரு காலகட்டத்தில் தான் நாம் ரமழானை வரவேற்க விருக்கின்றோம். ஆகவேஇ நிச்சயமாக கடந்தகாலத்தினைப்போன்று எம்மால் செயற்பட முடியாது என்பதை ஒவ்வொரு இஸ்லாமிய பொதுமகனும் உணர்ந்துள்ளான். அல்லாஹ் புனித ரமழான் மாதத்தை அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். முஸ்லிம்கள் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் செயற்படவேண்டும். 

மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன் இளைஞர்கள் இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்த்து கொள்வதோடுஇ பெற்றோரும் பொறுப்புவாய்ந்தவர்களும் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல் வேண்டும். 

இரவு நேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறகுக்கு இடையூறு ஏற்படாத வகையில ஒலிபெருக்கி சத்தத்தை மஸ்ஜிதுக்கள் மாத்திரம் வைத்துக் கொள்வதோடுஇ மஸ்ஜிதுக்கு வருபவர்கள் முடிந்தளவு வாகனங்களில் வருவதை தவிர்த்து கொள்வதும் சிறப்பானதாகும். 

ஆர்.ராம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04