கிரியெல்லவிற்கு எதிரான நடவடிக்கை : உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு எந்த தீர்மானமும் எடுக்க முடியாது - தயாசிறி

Published By: Digital Desk 4

05 May, 2019 | 07:58 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடைய பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் வகையிலும் எழுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ள கடிதங்களின் பின்னணியில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளார் என்பதை உறுதிப்படுத்தாமல் எந்த தீர்மானத்துக்கும் வர முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எழுத்தப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள கடிதங்கள் குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தயாசிறி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கு எதிராக எழுத்தப்பட்ட கடிதங்களின் பின்னணியில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகின்றன. அவற்றைக் கொண்டு திடீரென எந்தவொரு முடிவிற்கும் வரை முடியாது. காரணம் இது சாதாரண விடயம் கிடையாது.

இந்த கடிதங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். விசாரணைகளின் நிறைவில் வெளிவரும் உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து தீர்மானிக்க முடியும்.

ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிடுவதைப் போன்று உடனடியாக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர முடியாது. தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை நிறைவடைந்ததன் பின்னர் கட்சி ரீதியாகக் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41