ரிஷாட் , அசாத் சாலி , ஹிஸ்புல்லா, முஜுபுர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதிகளினால் செயற்பட்டிருக்க முடியாது ; விஜயதாஸ ராஜபக்ஷ

Published By: Digital Desk 4

05 May, 2019 | 06:36 PM
image

(நா.தினுஷா)

30 வருடக்கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாறாக இன்னுமொரு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நிறைவேற்றப்பட கூடாது. அதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதுடன் மக்களை அணித்திரட்டியாவது புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி , ஹிஸ்புல்லா மற்றும் முஜுபுர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்பின்றி இந்த பயங்கரவாதிகளினால் செயற்பட்டிருக்க முடியாது . இவர்கள் அனைவரும் பிரதமரின் பாதுகாப்பில் உள்ளதால் நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை . மேலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடாடிய கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். 

ஆகவே எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னதாக ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேணடும்

என்றும் கோரிக்கை விடுத்தார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் சுகநலன் விசாரிப்பதற்காக நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிடார்.

அவர் மேலும் கூறியதாவது;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னர் ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்க ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லா போன்றோர் தமது ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

அதேபோல் ரிஷாட் பதியுதீன்,  அசாட் சாலி , இஸ்புல்லா மற்றும் முஜுபுர் ராஹ{மான் போன்றோரின் அணுசரனை இல்லாமல் இந்த பயங்கரவாதிகளினால் செயற்பட்டிருக்க தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் கிடையாது. இவர்கள் பிரதமரின் பாதுகாப்பின் கீழ் உள்ளதால் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் உள்ளது.

பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான சக்தி தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்பட்டதாலேயே 30 வருடகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவரக்கூடியதாக இருந்தது. எனவே இதற்கு மாறாக இன்னுமொரு புதிய சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க்பபட கூடாது. 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது. மக்களை அணித்திரட்டியாவது பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தடுத்து நிறுத்துவதுடன் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58