"ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடே இஸ்லாத்தின் புனித தன்மையினை இன்று கேள்விக்குறியாக்கியுள்ளது"

Published By: Vishnu

03 May, 2019 | 08:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில்  பாரிய சந்தேகங்கள்  காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

ஆயுதங்கள் பள்ளிவாசலின்  சுற்றுசூழலை துப்புரவு செய்ய வைத்திருப்பதாக முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர்  குறிப்பிடுவது பொறுப்பற்ற  தன்மையினை  வெளிப்படுத்துவதாகவும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் பொருத்தமற்ற விதமாக ஆயுதங்களை  வைத்திருந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத மற்றும் அமைதி வழி போதனைகளை போதிக்கும் இடங்களில் ஆயுதங்களை  வைத்திருப்பது மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டன. 

இவ்வாறான  செயற்பாடுகளே இன்று தேசிய  பாதுகாப்பினை   பலவீனப்படுத்தியுள்ளது. ஒரு  தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள்  இன்று இஸ்லாத்தின் புனித தன்மையினை கேள்விக்குறியாக்கியுள்ளமை வருத்தத்திற்குரியது எனவும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30