மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு

Published By: R. Kalaichelvan

03 May, 2019 | 07:07 PM
image

மன்னார் சாந்திபுரம் புகையிரத கடவைக்கு அருகிலிருந்து வெடிப்பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில்  உள்ள காட்டு பகுதியில் இன்று  மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர்  மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான இரண்டு பொதிகள்  அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சந்தேகத்திற்கு இடமான குறித்த இரண்டு பொதிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் குறித்த சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்பட்டதை அடுத்து விரைந்து வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பொதிகளை மீட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சி-4 வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52