வெடி பொருட்­க­ளுடன் இருபது வாக­னங்கள்

Published By: Vishnu

03 May, 2019 | 09:36 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெடி பொருட்கள் பொருத்­தப்­பட்ட 20 வாக­னங்கள் தெற்­கி­லி­ருந்து வடக்­குக்கு வந்­துள்­ள­தாக உள­வுத்­து­றைக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளதால் வடக்கில் சோத­னைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன. அதன்­படி வட பகுதிக்குள் நுழையும், அங்­கி­ருந்து வெளி­யேறும்  அனைத்து வாக­னங்­க­ளையும்  நேற்று சோத­னைக்குட்­ப­டுத்த ஆரம்­பித்­த­தாக இரா­ணு­வத்­தினர் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு சோத­னை­களின் போது தேடப்­படும் வாக­னங்­களில் பெரும்­பா­லா­னவை உயிர்த்த ஞாயிறு  தினத்­தன்று கொழும்பு, நீர்­கொ­ழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பில் தேவா­ல­யங்கள் நட்­சத்­திர ஹோட்­டல்­களில் நடாத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் குண்­டு­தா­ரி­களின் பெய­ரிலும் அவர்­களைச் சார்ந்­தோரின் பெய­ரிலும்

 பதிவு செய்­யப்­பட்­டவை என உள­வுத்­த­க­வல்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக உயர் இரா­ணுவ அதி­காரி ஒருவர் கூறினார். 

இவ்­வாறு தேடப்­படும் வாக­னங்­களில் 12 மோட்டார் சைக்­கிள்கள், இரு வேன்கள், கெப் வண்டி ஒன்று,  முச்­சக்­கர வண்­டி­யொன்று, டிமோ பட்டா லொறி­யொன்று,  இரு கார்கள் அடங்­கு­வ­தாக குறித்த இரா­ணுவ அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.  உள­வுத்­துறை தக­வல்­க­ளுக்கு அமைய அந்த வாக­னங்­களை கைப்­பற்ற வடக்கில் விஷேட 4 சோதனை சாவ­டி­களை நிறு­வி­ய­தா­கவும்  அந்த இரா­ணுவ அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

வவு­னியா நகரம்,  ஹொரவ்­பொத்­தானை வீதி,  தாண்­டிக்­குளம், இரட்டை பெரிய குளம் ஆகிய பகு­தி­களில் இந்த நான்கு பிர­தான சோதனை சாவ­டி­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் இந்த 20 வாக­னங்­களின் இலக்­கங்­க­ளையும் பொது மக்கள் பார்வை இடு­வ­தற்­காக சில வீதி­களில் பாது­காப்புத் தரப்­பினர் காட்சிப் படுத்­தி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

பாது­காப்புத் தரப்பு தேடும் வாக­னங்­களின் விபரம் வரு­மறு:

BCY 2183 ரிவிஎஸ் மோட்டார் வண்டி 

VP 7783    பஜாஜ் பல்சர் மோட்டார் வண்டி 

PH 3779  கரவன் வான் 

BHA 5891  மோட்டார் வண்டி 

PJ 4080 டிமோ சிறி­ய­ரக லொறி 

AAC 9844 முச்­சக்­க­ர­வண்டி

BCA 4843 யமகா மோட்டார் வண்டி 

BAE 4197 ஜே எ சி கெப் வண்டி 

US 3740 மகேந்­திரா கெப் வண்டி 

BDM 0596  ஹொண்டா ஸ்கூட்டி 

15- 0316  கார் 

CBF 1618 கார் 

BCK 8048 மோட்டார் சைக்கிள் 

BHF 5891 ஸ்கூட்டி 

MR 1605 மோட்டார் வண்டி 

BCY 2183 மோட்டார் சைக்கிள் 

BAO 5891 மோட்டார் சைக்கிள் 

VL 9223 மோட்டார் சைக்கிள் 

PH 3778 ஹை ஜெட் வான் 

WP VC 4843  FZ16 யமஹா மோட்டார் சைக்கிள் 

கிங்ஸ்­பரி ஹோட்டல் தற்­கொ­லை­தா­ரியின் மோட்டார் சைக்கிள்

இத­னி­டையே  கொழும்பு கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடாத்­திய குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபா­ரக்­குக்கு சொந்­த­மான எப்.இஸட் ரக மோட்டார் சைக்­கி­ளொன்று   நேற்று பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டுள்­ளது. குளி­யா­பிட்டி  பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வ­ருக்கு கிடைத்த தனிப்­பட்ட தக­வ­லொன்­றுக்கு அமை­வாக குளி­யாப்­பிட்டி  பொலிசார் இந்த மோட்டார் சைக்­கிளைக் கைப்­பற்­றி­யுள்­ளனர்.  டப்­ளியூ.பி.வி.சி. 4843 எனும் இலக்­கத்தைக் கொண்ட மோட்டார் சைக்­கிளே இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. 

குறித்த தற்­கொலை குண்­டு­தா­ரியின் பெயரில் உள்ள இந்த மோட்டார் சைக்கிள், குளி­யா­பிட்டி  - எம்­பவ பகு­தியைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி  ஒரு இலட்­சத்து 83 ஆயிரம் ரூபா­வுக்கு விற்­பனை  செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அந்த மோட்டார் சைக்­கிளை விற்­பனை  செய்யும் போது குண்­டு­தாரி, அதனை மீள பதிவு செய்­வ­தற்­கான திறந்த ஆவ­ணங்­க­ளையும் வழங்­கி­யுள்­ள­துடன் இதன்­போது அவரின் தேசிய அடை­யாள அட்டை பிரதி ஒன்­றி­னையும் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளார். இவை­ய­னைத்­தையும் குளி­யாட்டி  பொலிசார் தமது பொறுப்பில் எடுத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

இந்த மோட்டார் சைக்­கிளின் இலக்கம் வட்ஸ் அப் சமூக வலைத்­த­ளங்­களில் தேடப்­படும் வண்டி இலக்­கங்கள் என பரவி வந்த நிலை­யி­லேயே, அச்­சத்தில் அதனை கொள்­வ­னவு  செய்த நபர் குளி­யா­பிட்டி  பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­தகர்  ரொஷான் வெத­முல்­ல­வுக்கு தகவல் கொடுத்­துள்ளார். அத­னை­ய­டுத்தே அதனை பொலிசார் கைப்­பற்­றி­யுள்­ளனர். மோட்டார் சைக்­கிளை கொள்­வ­னவு செய்­த­வ­ருக்கும்,  குண்­டு­தா­ரிக்கும் இடையில் ஏதேனும் தொடர்­புகள் இருந்­த­னவா எனவும் பொலிஸார் விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

கல்­மு­னையில் சிக்­கிய இரத்தக் கரை படிந்த கார்

கல்­முனை பகு­தியில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன்­போது சந்­தே­ந­ப­ரி­ட­மி­ருந்து இரத்­தக்­கறை படிந்த கார் மற்றும் உயிர்த்த ஞாயி­றன்று நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய நிழற்­ப­டங்­களைக் கொண்ட கைய­டக்கத் தொலை­பே­சியும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக, பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­யைினர் தெரி­வித்­துள்­ளனர். இந்தச் சம்­பவம் தொடர்பில் கல்­முனை பகு­தியை சேர்ந்த பொறி­யி­லாளர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சோத­னை­களில் சிக்­கி­யவை

இதே­நேரம், கலஹா மற்றும் மாத்­தறை – மாலிம்­பட பகு­தி­களில் வாள் மற்றும் கூரிய ஆயு­தங்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு, பண்­டா­ர­கம அலுத்­கம பகு­தியில் நேற்று முன் தினம் மாலை முன்­னெ­டுக்­கப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது 4 சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதனைத் தவிர, கல்­கிஸ்ஸ விஹார மாவத்­தையில் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய காணொ­ளிகள், நிழற்­ப­டங்கள் மற்றும் குரல் பதி­வினை தம்­வசம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்,

தர்கா நகர் நகரில் வெலி­பிட்­டிய பகு­தியை அண்­மித்த பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது, சந்­தே­க­ந­பர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கண்­டியில் 11 பேர் கைது

இத­னி­டையே கண்டி – வத்­து­காமம், மட­வல தோட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போது 11 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் மட­வல தோட்­டத்தில் உள்ள வீடொன்றை சோத­னைக்­குட்­ப­டுத்­திய போது, அங்­கி­ருந்து 12 சிறிய கத்­தி­களும், துப்­பாக்­கி­யொன்றும், சூட்­சு­ம­மான முறையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 10 பெரிய கத்­தி­களும், கெமரா ஒன்றும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் கூறினர். இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் இணைந்து இந்த சுற்­றி­வ­ளைப்பை மேற்­கொண்­டுள்­ளனர்.

அளுத்­கம சுற்­றி­வ­ளைப்பு

இதே­வேளை, அளுத்­கம தர்கா நகரில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போது இரண்டு சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த சுற்­றி­வ­ளைப்பின் போது பதிவு செய்­யப்­ப­டாத இரண்டு மோட்டார் சைக்­கிள்­களும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர். பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை மற்றும் இரா­ணு­வத்­தினர் இணைந்து இந்த சுற்­றி­வ­ளைப்பை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

ஸ்னைப்பர் துப்­பாக்கி பாகத்தின் மீட்பு

இரா­ணு­வமும் உளவுத் துறையும் இணைந்து  நேற்று குரு­ணாகல் நகரை அண்­மித்த பகு­தி­களில் முன்­னெ­டுத்த விஷேட சோத­னை­களின் போது, வீடொன்­றி­லி­ருந்து ஸ்னைப்பர் ஆயு­தத்­துக்கு பொருத்­த­பப்டும் தூரத்தில் உள்­ள­வற்றை பெருப்­பித்துக் காட்டும் உப­க­ர­ணமும் ஆயு­தத்தின் ஏனைய பகு­தி­களும் மீட்­கப்­பட்­ட­தாக பொலிசார் கூறினர். குரு­ணாகல் - நீர் கொழும்பு பிர­தான வீதியில் மலி­ய­தேவ ஆண்கள் கல்­லூ­ரிக்கு அருகில் உள்ள வீடொன்­றி­லி­ருந்தே இவைக் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட அந்த வீட்­டி­லி­ருந்து   வாள், இரண்டு  கத்­திகள், உரைகள் அடங்­கிய 16 இறு­வெட்­டுக்கள், சந்­தே­கத்­துக்கு இட­மான ஆவ­ணங்கள் என்­ப­னவும் மீட்­கப்­பட்­டுள்­ளன. குறித்த வீட்டில் வாட­கைக்கு குடி­யி­ருந்­த­தாக கூறப்­படும் நபர் ஒரு­வரை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பொலிசார் தமது பொறுப்பில் எடுத்­துள்­ளனர். 

சஹ்­ரானின் சகோ­தரன் ரில்­வானின் மனைவி வீட்டில் சிக்­கிய தற்­கொலை அங்கி

 இத­னி­டையே நேற்று பாது­காப்பு தரப்­பினர் காத்­தாண்­குடி 5 பகு­தியில் அமைந்­துள்ள, வீடொன்­றினை விஷேட சோத­னைக்கு உட்­ப­டுத்­தினர். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி சஹ்­ரானின் தம்­பி­யான சாய்ந்­த­ம­ருது தற்­கொலை  குன்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான மொஹம்மட் ரில்­வானின் மனைவி வீட்டில் இந்த சோதனை நடத்­தப்­பட்­டுள்­ளது.   இதன்­போது அவ்­வீட்­டி­லி­ருந்து தற்­கொலை குண்­டு­த­ரிகள் அணியும் ஜக்கட் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அதில் எந்த வெடி­பொ­ருட்­களும் பொருத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என பொலிஸார் கூறினர். இத­னை­விட 4 தொலை­பே­சிகள், வங்கிக் கணக்குப் புத்­தகம் மற்றும் பல தேசிய அடை­யாள அட்­டைகள் சிக்­கி­யுள்ள நிலையில் வீட்டில் இருந்த ரில்­வாவின் மாமாவும் மாமி­யாரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சோத­னைகள் தொடரும்

இதனிடையே பாதுகாப்பை   உறுதி செய்வதற்காக  நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு  தரப்பினரல முன்னெடுக்கபப்டும் சோதனைகளும் கைதுகளும் தொடரும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர்  ருவன் குணசேகர கூறினார்.

அவசர கால சட்ட விதிமுறைகளின் கீழ் இராணுவத்தினருக்கு சோதிக்கவும், கைதுகளை முன்னெடுக்கவும் அதிகாரம் உள்ளது என அவர் இதன்போது  சுட்டிக்காட்டினார். 

வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய விஷேட திட்டம்

இதனிடையெ நாட்டில் நிலவும் சூழலை மையப்படுத்தி போலி புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடாகவோ கருத்துக்கள் ஊடாகவோ வதந்திகளை பரப்பி இன மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை   எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். இதற்காக விஷேட செயற்றிட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17