இம்ரான் தாகீரின் பின்னால் ஓட முடியாது - தோனி

Published By: Vishnu

02 May, 2019 | 09:14 PM
image

நானும் வோட்சனும் நூறு சதவீதம் உடற் தகுதியை இழந்து விட்ட நிலையில் இம்ரான் தாகீரின் பின்னால் ஓடுவது கடினமான விடயம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 80 ஓட்டங்களினால் வெற்றிபெற்று பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்தது.

இப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவிய இம்ரான் தாகீர் 12 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்ளேவுடன் சுவாரசிய விக்கெட் எடுத்தவுடன் இம்ரான் தாகீர் வெளிப்படுத்தும் கொண்டாட்டம் குறித்து கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த தோனி, 

இம்ரான் தாகீர் அப்படிக் கொண்டாடுவதைப் பார்ப்பது ஆனந்தமானது. ஆனால் அவரிடம் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவர் விக்கெட் எடுத்தால் நானும் வோட்சனும் அவரிடம் செல்லமாட்டோம். ஏனெனில் அவ்வபோது அவர் அந்தப் பக்கம் ஓடிவிடுகிறார். 

நானும் வோட்சனும் நூறு சதவிகிதம் உடற்தகுதி இல்லாத நிலையில் அவர் பின்னால் ஓடுவது கடினமானது. நல்ல விடயம் என்னவென்றால், அவர் தன்னுடைய ஓட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுவார். அப்போது நாங்கள் அவரைப் பாராட்டுவோம் என்றார்.

அத்துடன் 'தல' என்ற செல்லப் பெயரை பெற்றிருப்பது சிறப்பானது. இது ஒரு பெரிய செல்லப்பெயர். இதை நான் மிகவும் விசேடமாக உணர்கிறேன். சி.எஸ்.கே. பாடலில் இந்த வார்த்தை இடம்பெற்றதை நான் அறியவில்லை. பிறகு தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். 

தமிழ் நாட்டு மக்கள் என்னை ஏற்றுகொண்டுள்ளார்கள். எங்குப் பார்த்தாலும் தல என்றுதான் அழைப்பார்கள். இதரப் பகுதிகளில் யாராவது என்னை அப்படி அழைத்தால் அவர் சி.எஸ்.கே. ரசிகர் என அறிந்து கொள்வேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41