தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நடிகர்களே, நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டவர்கள். அந்த வகையில் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் அஜித் ஷாலினி. இவர்கள் திருமணம் செய்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் 'அமர்க்களம்' படத்தில் அஜித் மற்றும் ஷாலினி நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அந்த காதல் இரு வீட்டார்களின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. அனோஷ்கா, ஆத்வி என இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-ஷாலினி தம்பதிக்கு கோலிவுட் திரையுலகினர் தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.