ஏழுமலையானிடம் உள்ள நாணயங்களை எடைபோட்டு வாங்க ரிசர்வ் வங்கி முடிவு.!  

Published By: Vishnu

02 May, 2019 | 06:40 PM
image

திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள 90 டன் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை, டன் ஒன்றுக்கு 27 ஆயிரம் ரூபாய் கொடுத்து (இந்திய ரூபா) வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் திருக்கோயில் உள்ளது. இங்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அப்படி வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிமித்தம் முடிப்பு கட்டி நாணயங்களை சேகரித்து வைத்து, அதைக் கொண்டுவந்து உண்டியலில் செலுத்துகின்றனர். இப்படி செலுத்தப்படும் காணிக்கைகளில், தற்போது புழக்கத்தில் இல்லாத 25 பைசா மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நாணயங்களும் வருவதுண்டு.

குறிப்பிட்ட நாளில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கையாக வந்த பணத்தை எண்ணும்போது, புழக்கத்தில் இல்லாத நாணயங்களை தனியே பிரித்தெடுத்து சாக்கு மூடைகளில் கட்டி வைப்பது வழக்கம். இப்படி சேர்க்கப்பட்ட நாணயங்கள் மட்டும், சுமார் 90 டன் அளவுக்கு தேவஸ்தான நிர்வாகத்திடம் இருப்பதாக தெரிகிறது.

இந் நிலையில், புழக்கத்தில் இல்லாத நாணயங்களை வாங்கிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது. இதையேற்ற இந்திய ரிசர்வ் வங்கி, திருப்பதி தேவஸ்தானத்திடம் இருக்கும் 90 டன் நாணயங்களை, டன் ஒன்றுக்கு 27 ஆயிரம் (இந்திய ரூபா) ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10