டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம்

Published By: Vishnu

01 May, 2019 | 11:22 PM
image

டெல்லி அணியினை 80 ஓட்டங்களினால் வீத்திய சென்னை அணி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல்.லின் 50 ஆது லீக் ஆட்டம் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 179 ஓட்டங்களை குவித்தது.

179 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி சென்னையின் சுழலில் சிக்கி, 16.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் டெல்லி அணி 80 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 4 ஓட்டத்துடனும், தவான் 19 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 44 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 5 ஓட்டத்துடனும், கொலிங் இங்ரம் ஒரு ஓட்டத்துடனும், அக்ஸர் படேல் 9 ஓட்டத்துடனும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 2 ஓட்டத்துடனும், கிறிஸ் மோரிஸ் டக்கவுட் முறையிலும், ஜகதீஷா சுசித் 6 ஓட்டத்துடனும், அமித் மிஷ்ரா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க டிரெண்ட் போல்ட் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில்  இம்ரான் தாகீர் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகளுடன் மீண்டும் பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்துள்ளது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49