முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும்  அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள் - சம்பிக்க 

Published By: Vishnu

01 May, 2019 | 10:44 PM
image

(ஆர்.யசி)

முஸ்லிம்களின் அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல, ஆகவே முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டும், மீண்டும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த நாட்டில் மதவாத மோதல்களை உருவாக்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

எவ்வாறான பிரிவினைவாதம், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட எமது புலனாய்வு துறையின் தகவல்களை கருத்தில் கொள்ளாது நிலைமைகளை கருத்தில் கொள்ளாது ஒரு சிலரது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை கையாண்ட காரணத்தினால் தான் இலங்கையில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

சஹறான் என்ற நபர் இன்று அல்ல கடந்த 2014 ஆம் ஆண்டே தடுக்கப்பட வேண்டிய ஒரு நபராவார். அதேபோல் எதிர்காலத்தில் உருவாக்கவிருக்கும் பயங்கரவாத சாத்தான்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதில் பிரதான கடமை முஸ்லிம் மக்களிடம் உள்ளது. எந்த அச்சமும் இல்லாது முன்வரவேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் அடிப்டைவாதிகளை எமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22