சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பு

Published By: Digital Desk 4

01 May, 2019 | 08:41 PM
image

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பதுடன், விசாரணைக்காக வீடுகளுக்குச் சென்றால் கதவடைப்புச் செய்கின்றனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக முறுகல் நிலை தொடர்கிறது. இடையிடையே கைகலப்பு – வாள்வெட்டு வன்முறையும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வன்முறை உக்கிரமடைந்து வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றது.

பாலாவி மற்றும் கெற்பலியைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.

சம்பவத்தில்  வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் வன்முறைக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் வீதியில் சென்ற பாலாவியைச் சேர்ந்த  யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த  சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

“இரண்டு கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதகாலமாக முறுகல் நிலை தொடர்கிறது. சில வன்முறைகளும் அங்கு இடம்பெற்றன. எனினும் நேற்று செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

சம்பவத்தையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் விசாரணைக்காக கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்றால் மக்கள் வீட்டுக்கதவை அடைத்துவிட்டு ஒத்துழைப்புத் தர மறுக்கின்றனர். வன்முறைகள் தொடர்பில் சாட்சியம் வழங்க எவரும் முன்வருகிறார்கள் இல்லை.

சாட்சியம் வழங்கினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அந்த ஊர்களின் மக்கள் அச்சமடைகின்றனர். அதனால் வன்முறைகளுடன் தொடர்புடைய 20 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் கைது செய்ய முடியவில்லை.

இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகியுள்ளனர். அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15