சிறையிலுள்ள அப்பாவியை விடுவிக்கவும் - ஜனாதிபதிக்கு இலங்கை இந்து சம்மேளனம் கடிதம்

Published By: Vishnu

01 May, 2019 | 05:14 PM
image

(நா.தனுஜா)

வவுணதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பிற்குத் தொடர்புள்ளமை உறுதியாகியிருக்கும் நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிர்காமத் தம்பி ராசகுமாரனை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவரச கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது

.

இவ்விடயம் குறித்து இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த குறிப்பிடுகையில்,

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பாதுகாப்பு அரணில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கதிர்காமத்தம்பி ராசஜகுமாரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வங்கிகளில் கடன்பெற்று கொள்வனவு செய்யப்பட்ட இவரது மோட்டார் வாகனத்தையும் வவுணதீவு பொலிஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வவுனியாவில் தலைமறைவாக இருந்தபோது கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவரும், தற்கொலை குண்டுதாரியாகவும் செயற்பட்ட சஹ்ரானின் சாரதி மொஹமட் சரீப் ஆதம் லெப்பே என்ற நபரை விசாரித்தபோது வவுணதீவு பொலிசாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியது, படுகொலை செய்தது அனைத்துமே நாட்டில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌஹீத் ஜமா- அத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

வவுணதீவு படுகொலைகள் தொடர்பான உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான கதிர்காமத்தம்பி ராசஜகுமாரனை உடனடியாக விடுதலை செய்து, கடுமையான வாழ்வாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச்செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58