இராணுவத்தினர் எமது  நாட்டின்  விவகாரங்களில் தலையிடுவது    பாரிய  எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்  - விமல் வீரசன்ச 

Published By: R. Kalaichelvan

01 May, 2019 | 04:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தீவிரவாத  தாக்குதலின்  ஊடாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் தேவைகளை  நிறைவேற்றிக் கொள்ள  முயற்சிக்கின்றார்.  பிற  நாட்டு இராணுவத்தினர் எமது  நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் நேற்று கோட்டை  மாநகர சபை பிரதான  மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி  அரசாங்கம்  இன்று நாட்டை நிர்மூலமாக்கி விட்டது.கடந்த நான்கு வருடகாலமாக அரசாங்கம் முன்னெடுத்த  முறையற்ற  செயற்பாடுகளின் காரணமாகவே சர்வதேச தீவிரவாதம் இன்று நாட்டுக்குள் ஊடுறுவியுள்ளது.அரச புலனாய்வு  பிரிவினர்  தேசிய பாதுகாப்பு கருதி  பயன்படுத்தப்படவில்லை மாறாக கடந்த அரசாங்கத்தை புலனாய்வு செய்வதற்கு மாத்திரமே   பயன்படுத்தப்பட்ன. 

நெருக்கடி  நேரத்தில்  சர்வதேம்   பாரிய உதவிகளை   வழங்கியுள்ளதாக  பெருமிதம் கொள்ளும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர் விளைவுகள் தொடர்பில் கவனிக்கவில்லை. 

தேசிய பாதுகாப்பிற்கு இன்று காணப்படுகின்ற அச்சுறுத்தலை  சர்வதேச  நாடுகள் தமக்கு  சாதகமாக  பயன்படுத்திக் கொள்ள   முயற்சிக்கின்றறன. திருகோணமலை துறைமுகம் தொடர்பில் ஆரம்ப காலத்தில் இருந்து  அமெரிக்கா தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றமை  அனைவரும் அறிந்ததே.

ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள்  இரண்டாவத  தடவையாக  தாக்குதலை  மேற்கொள்ளவுள்ளதாக  அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளமையின்  பின்னணியை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.  

ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத்தை உருவாக்கியது யார்.

அமெரிக்கா  தனது  ஆதிக்கத்தை  நிலை நிறுத்திக் கொள்ள   ஏனைய     நாடுகள் மீது    தீவிரவாத  தாக்குதல்கள் இடம் பெறும் போது  உதவி வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு   நிபந்தனைகளற்ற விதத்தில்   ஊடுறுவி தொடர்ந்து அந்நாட்டில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளும்  இந்நிலைமை   எமது  நாட்டுக்குள் ஏற்பட கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21