பிளேஒப் சுற்றுக்குள் நுழையும் அடுத்த இரு அணிகளும் எது?

Published By: Vishnu

01 May, 2019 | 12:27 PM
image

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 56 லீக் போட்டிளும் எதிர்வரும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையுவள்ள நிலையில் பிளேஒப் சுற்றுக்கு தகுதி பெறும் அடுத்த இரண்டு அணிகளும் எது என எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.

2019 ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 23 ஆம் திகதி ஆரம்பமாகி வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. 

லீக் சுற்று போட்டிகள் 49 நிறைவுபெற்றுள்ள நிலையில் நோக்கவுட் எனப்படும் பிளேஒப் சுற்று 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பிளேஒப் சுற்றுக்கு நுழைந்துள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு நுழையப் போகும் இரண்டு அணிகளும் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

குறிப்பாக மும்பை, ஐதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே இதற்கான போட்டி நிலவுகின்றது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வுயுடன் 14 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது  இடத்தில் உள்ளது. இன்னும் ஓரே ஆட்டத்தில் வென்றால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் மும்பை, பெங்களூரு  அணிகளுடன் மோத வேண்டும். 2 ஆட்டங்களிலும் வென்றால் தான் ஐதராபாத்துக்கு 16 புள்ளிகளை பெற முடியும். ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றால் 14 புள்ளிகளுடன் அந்த அணி ஏனையஅணிகளுடன் போட்டி போட வேண்டும். 

8 அணிகள் மத்தியில் சிறந்த ஓட்ட சராசரியுடன் உள்ளது ஐதராபாத். அந்த அணியும் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தாலும் தகுதி பெற்று விடும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வுயடன் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. 

அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றிபெற்றால் 14 புள்ளிகள் பெறும். அதன் ஓட்ட சராசரி 0.100 என உள்ள நிலையில், 2 வெற்றிகள் மூலம் மேலும் உயரும். அதே நேரத்தில் மும்பை, பெங்களூருவிடம்  ஐதராபாத் தோற்க வேண்டும். ராஜஸ்தானும் பெங்களூரு, தில்லியிடம் தோற்றால் கொல்கத்தா சராசரி விகிதம் முன்னேறும். 12 புள்ளிகளை மட்டுமே பெற்று ஏனைய 3 அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்தால், ஓட்ட சராசரி அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 போட்களில் வெற்றியும், 7 தோல்வுயும் பெற்று பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது.

நல்ல நிலையில் இருந்த பஞ்சாப், தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றதால் பிளேஓப் சுற்றில் நுழையவில்லை. ஐதராபாதுடன் பெற்ற தோல்வி பஞ்சாபை சிக்கலான நிலைக்கு தள்ளியது. கடைசி 2 ஆட்டங்களில் வெற்றிபெற்றாலும் பஞ்சாப் அடுத்த சுற்றுக்கு நுழைய முடியாத நிலை உள்ளது.

ஐதராபாத் 2 ஆட்டங்களில் வென்றாலோ அல்லது மும்பை, கொல்கத்தாவை வென்றாலோ பஞ்சாப் தனது வாய்ப்பை இழந்து விடும். 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வுயடன் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் பிளேஒப் சுற்றுக்கு நுழைவது சந்தேகம்.

ஐதராபாத் 2 வெற்றிகளை பெற்றாலோ, மும்பை கொல்கத்தாவை வென்றாலோ ராஜஸ்தான் வெளியேற வேண்டிய நிலை  ஏற்படும். குறைவான ஓட்ட சராசரியால் ராஜஸ்தான் உள்ளது. 

12 புள்ளிகளுடன் அனைத்து அணிகளும் மோதினாலும், ஓட்ட சராசரியால் ராஜஸ்தான் தகுதி பெறாது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணிக்கு ஏறக்குறைய வாய்ப்புகள் முடிந்து விட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு மழுங்கடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21