வவுனியாவில் முப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரம் 

Published By: Digital Desk 4

01 May, 2019 | 12:14 PM
image

வவுனியாவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை (01) மேற்கொண்டனர்.

வவுனியா ஹிச்ராபுரம்,அரபாநகர்  மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான வீடுகள், பள்ளிவாசல், வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாய்கள் மூலமும் சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பஸ் நிலையம், மதஸ்தளங்கள் என்பவற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..

இந்நிலையிலேயே இன்று வவுனியா ஹிச்ராபுரம் பகுதியில் காலை 7.30 மணியில் இருந்து 10.30 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32