தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் போத்தல் வழங்கிய சிறுமி..!

Published By: Digital Desk 4

30 Apr, 2019 | 05:22 PM
image

இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல்  வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலைியில் நேற்று கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதியில்  தொடங்கி, சாய்ந்தமருது வரையான பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, கல்முனை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொடுத்தார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த புகைப்படம், சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08