தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சிரியாவில் பயிற்சி பெற்றார்- சர்வதேச ஊடகம்

Published By: Rajeeban

30 Apr, 2019 | 04:25 PM
image

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என  விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தெகிவளை விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியா சென்றமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளர்என வோல்ஸ்ரீட் ஜேர்னல்  தெரிவித்துள்ளது.

லத்தீவ் 2014 இல் சிரியாவின் ரக்காவிற்கு சென்றார் அவ்வேளை ரக்கா ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கியது  வெளிநாட்டு தீவிரவாதிகள் பலர் அங்கு சென்றனர் என விசாரணையுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் அங்கு ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியாவின் நெய்ல்பிரகாஸ் மற்றும் ஜிகாதி ஜோன் என அழைக்கப்பட்ட பிரிட்டனின் முகமட் எம்வாஜியுடன் தன்னை சேர்த்துக்கொண்டார்என விசாரணையுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்..

எம்வாஜியே அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ்பொலி மற்றும் ஸ்டீபன் சொட்லொவ் கொல்லப்படுவதற்கு காரணமானவர் இவர் 2015 இல் அமெரிக்காவி;ன் ஆள்இல்லாத விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

லத்தீவ் பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவில் வானூர்தி பொறியலை பயின்றார்.அதேவேளை இவர் மூன்று அல்லது ஆறு மாதங்கள் சிரியாவில் பயிற்சி பெற்றுள்ளார் என அந்த நபர் தெரிவித்தார்.

அதன் பின்னர் மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அவர் இலங்கைக்கு அனுப்பபட்டார்எனவும் விசாரணைகளில் தொடர்புபட்ட அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துருக்கி சிரியா ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்டமை குறித்து மூன்று குண்டுதாரிகள் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு ஐஎஸ் அமைப்பினரை  தொடர்புகொண்டு குண்டுதயாரிப்பது தகவல் தொடர்பாடல்களை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களை பயின்றிருக்கலாம் என விசாரணைகளில் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19