இராணுவத்தினர் வசமிருந்த கலாசார மண்டபம் அரசாங்க அதிபரிடம் ஒப்படைப்பு

Published By: Digital Desk 4

30 Apr, 2019 | 03:55 PM
image

வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம்  இராணுவ கட்டுப்பாட்டில் 25 வருடங்களாக இருந்து பின் இராணுவத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு  இன்று வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டபம் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்திருந்தமையினால் மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தது. இதனைக்கருத்தில் கொண்டு இராணுவத்தினர் 10 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த இரண்டு வருடங்களாக புனரமைப்பு செய்யப்பட்டு வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம். கனீபாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.

குறித்த கலாசார மண்டபத்தினை 2017 ஆம் ஆண்டு இராணுவத்தினர் சமாதான சூழலை கருத்தில் கொண்டு கலாசார மண்டபத்தில் இருந்த இராணுவ முகாமை அகற்றி பிரதேச செயலாளர் கா. உதயராசாவிடம் கையளித்திருந்தனர்.

1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜா குகனேஸ்வரனின் பன்முகப்பட்டுத்தப்பட்ட நிதி மற்றும் அரசின் ஏனைய நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட குறித்த கலாசார மண்டபம் திறப்பு விழா காண இருந்த நிலையில் அரசியல் போட்டியினால் திறக்கப்படாது காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இராணுவத்தினர் அதனை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55