ட்ரோன் மூலம் சிறுநீரக உறுப்பை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சாதனை

Published By: Digital Desk 3

30 Apr, 2019 | 03:17 PM
image

ட்ரோன்  மூலம் வைத்தியசாலைக்கு சிறுநீரக உறுப்பு கொண்டு சென்ற சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் சிட்டியில் 44 வயது பெண்மணி 8 வருடமாக டயாலிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். 

இதனால் அவருக்குச் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகம் மேற்கு பால்டிமோர் சிட்டியிலிருந்து 31.5 மைல் தூரம் வரவேண்டி இருந்தது. அதைக் கொண்டுவர முதல்முறையாக வைத்தியர்கள் ட்ரோன்னை பயன்படுத்தியிருந்தனர்.

இதற்கு தகுந்தவாறு வைத்தியாலையுடன் சேர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழக வைத்தியர்கள் திட்டமிட்டனர்.

சிறுநீரகத்தைக் கொண்டு செல்வதற்கு முன்பாக இதே ட்ரோனை பயன்படுத்தி இரத்தம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டனர். 

அதன்படி ட்ரோன் மேற்கு பால்டிமோர் சிட்டியில் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு இடையேயான சில மைல்களை வெற்றிகரமாகக் கடந்து சிறுநீரக உறுப்பை கொண்டு சேர்த்தது. 

” உடல் உறுப்புகளை இப்போது கொண்டு செல்லும் முறையை மாற்றியமைப்பதற்கு இது ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. இந்த முறை அமுலுக்கு வந்தால், நிறைய மக்கள் பயன் பெறுவார்கள். அமுலுக்கு வருவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம். ஆனால், அதற்கு இதுதான் முதல்படி ஆகும் " என அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் ஜோசப் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47