பொதுமக்களின் ஒத்துழைப்புடனே தீவிரவாதிகளை அழிக்க முடியும் : முப்படையினர்

Published By: R. Kalaichelvan

30 Apr, 2019 | 02:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுமக்களின் ஒத்துழைப்புடனே தீவிரவாதிகளை அழிக்க முடியும். சாய்ந்தமருது சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். தேசிய  பாதுகாப்பினை   வெகுவிரைவில்   உறுதிப்படுத்தி   நாட்டில் அமைதியான  நிலையினை   ஏற்படுத்த முடியும் என்ற  நம்பிக்கை காணப்படுகின்றது. 

நாட்டுக்காக   தியாகங்களை  செய்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது  எமது கடமையாகும் என்று முப்படையினர் தெரிவித்தனர்.

விமான படை ஊடகப்பேச்சாளர் 

 நாட்டில் இடம் பெற்றுள்ள  அசாதாரண நிலையினை வெற்றிக் கொள்ள  அனைவரும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். மத்தள   சர்வதேச   விமான நிலையம்,  கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையங்களின் பாதுகாப்பு   வழமையினை  விட பலப்படுத்தப்பட்டுள்ளன. 

விமான நிலையத்தினுள்ளும், வெளியிலும்  தீவிரவாத செயற்பாடுகள்  இடம் பெறாத வகையில்  பாதுகாப்பு நடவடிக்கைகள்  விமான படையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.  படையினர் பொறுப்புடன் செயற்படுகின்றனர்.  

விமான  நிலையத்தினுள் பிரவேசிக்கும் பயணிகள்  பொறுப்புடனும், மிக   கனவத்துடனும்  தங்களின் பயண பொதிகளை  தமது வசம் வைத்துக் கொள்வது அவசியமாகும். என விமான படை ஊடகப்பேச்சாளர் கெப்டன்  கிஹான்  செனவிரத்ன தெரிவித்தார்.

இராணுவ ஊடகப்பேச்சாளர்

 நாட்டில் ஊடுறுவியுள்ள  தீவிரவாதிகளை  அழிக்கும்  நடவடிக்கைகள்  வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு,  கிழக்கு,  மத்தியமாகாணம், மற்றும் மேல் மாகாணங்களின் பாதுகாப்பு   மற்றும்  சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

  இராணுவ சோதனை சாவடிகள்  08ல்  பாதுகாப்பு   பலப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரின்  செயற்பாடுகளுக்கு  பொதுமக்கள் முழுமையான  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  மக்களின் ஆதரவுடனே  தீவிரவாதிகளை அழிக்க முடியும் என்பது   சாய்ந்தமருது  பிரதேச  சம்பவத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  மக்கள் உள்ள  பிரதேசங்களில்  தற்போது இராணுவத்தினர்  பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளமையினால்  பொதுமக்கள் தேசிய பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தல் விடுக்கும்  செயற்பாடுகள் மற்றும் சந்தேகததிற்கிடமானவர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கு    தகவல்  வழங்குதல் கட்டாயமாகும்.

தேசிய பாதுகாப்பிலை  கேலிக்குறியாக்கும் செயற்பாடுகளையும்  நாட்டு மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் . பாதுகாப்பு தொடர்பில் போலியான  செய்திகளை   வதந்திகளாக்குவதை முழுமையாக தவிர்த்துக் கொள்வது அவசியம்.   தேசிய பாதுகாப்பிற்காகவும, பொதுமக்களின்  பாதுகாப்பிற்காகவும்  இராணுவத்தினர்  தியாகங்களை  புரிய  கடமைப்பட்டுள்ளார்கள் என  இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து  சுட்டிக்காட்டினார்.

கடற்படை ஊடகப்பேச்சாளர் 

நுரைச்சோலை  அனல் மின்னிலையத்தின்  பாதுகாப்பு  பலப்படுத்தபபட்டுள்ளது. தேசிய  பாதுகாப்பினை   பலப்படுத்த முப்படையினரும் குறுகிய  காலத்திற்குள் பாரிய  சேவையினை  புரிந்துள்ளனர். போலியான   வதந்திகளை  பொதுமக்கள்   நம்ப வேண்டாம்.  முன்னெடுக்கப்படுகின்ற  சுற்றிவளைப்புக்கள் மற்றும் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களின் கைது  முன்னிட்டை   வெற்றியின் இலக்காகும்.

 கடற்படையினர் முன்னெடுத்த  பாதுகாப்பு  நடவடிக்கையின்  போது   யாழ்ப்பாண   பகுதியில்  அடிப்படைவாத அமைப்பின்  பிரச்சார   பதாதைகள் மற்றும் அவர்களின் கொள்கை விளிப்புணர்வு    அறிக்கைகளை   தம்வசம் வைத்திருந்த   நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்புபில்  கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பொது மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான  அடையாள அட்டைகளை  தம்வசம் வைத்திருந்தமையின்  பெயரில்  சந்தேகத்தின்  அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.  

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவஸ்தானத்தை புனரமைக்கும்  நடவடிக்கை  மற்றும் திருத்தப்பணிகள்  கடற்படைக்கு  பொறுப்பாக்கப்பட்டுள்ளது.  கச்சத்தீவு   தேவாலயத்தை  புனரமைத்தவர்களின் உதவியுடன் தேவாலயத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.  

வெகுவிரைவில் இந்த தேவாலயம்  மக்களின்  பாவனைக்காக   அர்ப்பணிக்கப்படும் என கடற்படை ஊடகப்பேச்சாளர்  லுதினல் கமாண்டர் இசுறு  சூரிய பண்டார  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46