வாழ்வா–சாவா? ; ஐதராபாத் - பஞ்சான் இன்று மோதல்!

Published By: Vishnu

29 Apr, 2019 | 05:06 PM
image

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 48 ஆவது லீக் போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத்திலுள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு அணிகளும் தலா 5 வெற்றி, 6 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. 

எனினும் எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.  அதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா–சாவா? மோதல் தான். 

ஐதராபாத் அணிக்கு உள்ளூரில் நடக்கும் கடைசி லீக் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் 6 ஆட்டங்களில் 4 இல் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணிக்கு சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது கூடுதல் உத்வேகம் அளிக்கும். 

ஏற்கனவே பஞ்சாப்புக்கு எதிராக அவர்களது கோட்டையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி, இன்றைய தினம் அதற்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை கிறிஸ் கெய்ல் மற்றும் லோகேஷ் ராகுல் தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக இல்லாதது அந்த அணிக்கு பெரும் பலவீனமாக காணப்படுகிறது.எனினும் பந்து வீச்சில் அஸ்வின், முருகன் அஸ்வின் போன்றவர்களின் பந்துகள் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கின்றது.

கடந்த 2 ஆட்டங்களில் போராடி தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஒப் சுற்றுக்குள் நுழைய விடாபிடியாக போராட வேண்டிய கடப்பாடில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09